Published:Updated:

`கேத்தியில் பற்றவைக்கப்பட்ட காட்டுத் தீ!' -ஒரே இடத்தில் இரண்டாம் ஆண்டாகத் தொடரும் ஊட்டி சோகம்

காட்டுத் தீ
காட்டுத் தீ

வறண்டு கிடக்கும் காட்டை சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடக் கூடும் என்பதால் தீ தடுப்புப் பணிகளில் மொத்த வனத்துறையும் கவனம் செலுத்திவருகிறது.

நீலகிரிக் காடுகள் கடந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் அதிக மழையைப் பெற்றிருந்தாலும், முன்பனியின் இலையுதிர் மற்றும் உறைபனிக் காலங்களால் காடுகள் வறண்டு கிடக்கின்றன.

யானைக் கூட்டம்
யானைக் கூட்டம்

நீர்நிலைகளில் நீரோட்டம் மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. தண்ணீர் மற்றும் பசும்புற்களைத் தேடி காட்டுயிர்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளன. வறண்டு கிடக்கும் காட்டை சிறு தீப்பொறி சாம்பலாக்கிவிடக் கூடும் என்பதால் தீ தடுப்புப் பணிகளில் மொத்த வனத்துறையும் கவனம் செலுத்திவருகிறது.

இதில், 90 சதவிகிதக் காட்டுத் தீ மனிதத் தவறுகளால்தான் நிகழ்கின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் காட்டுத் தீ கேத்தி பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதே இடத்தில் இதே நாளில் கடந்த ஆண்டும் காட்டுத்தீ ஏற்பட்டு வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

காட்டுத் தீ
காட்டுத் தீ

காட்டுத் தீ குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர், ``மாவட்டத்தில் அனைத்து வனச்சரகங்களிலும் தீ தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதுமலையில் பல நூறு கி.மீ தூரத்துக்கு தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

80 கோடி உயிரினங்களை அழித்த ஆஸ்திரேலியக் காட்டுத் தீ... உலகுக்கு உணர்த்துவது என்ன?

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டுத் தீ ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. காட்டுத் தீயை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காட்டுத் தீ
காட்டுத் தீ

காட்டுத்தீயைத் தவிர்ப்பது குறித்துப் பேசும் சூழலியல் ஆர்வலர்கள் ``கேத்தி பள்ளத்தாக்கில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காட்டுத் தீ ஏற்பட்டிருப்பது திட்டமிட்ட ஒன்றுதான். இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள், சாலையோரங்களில் இரவு பகலாக தீ தடுப்புக் காவலர்கள் கண்காணிக்க வேண்டும். தீ தடுப்புப் பணியில் கூடுதலாக தற்காலிகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். காட்டுத் தீயை ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு