நகரப் பகுதிகளில் ஒரு காலத்தில் நீக்கமற நிறைந்திருந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அரிதாகிவிட்டது. பெருகி வரும் குடியிருப்புகள், அழிக்கப்பட்டு வரும் மரங்கள் எனச் சிட்டுக்குருவிகள் இடம்பெயர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் திரும்பவும் நம் வீடுகளுக்கு வரவைக்க முடியும் என்று சொல்கிறார்கள் பறவை ஆர்வலர்கள். இந்தச் சிட்டுக்குருவிகளை வீடுகளுக்கு வர வைப்பதற்கான ஒரு யோசனைதான் கூடுகள். கூடுகள் இருக்கும் இடங்களைத் தேடி சிட்டுக் குருவிகள் வருவது பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது.
முன்பதிவுக்கு பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். https://bit.ly/3KcjrAE

அந்த வகையில், கூடுகள் அமைப்பு, பசுமை விகடன், தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் `மீண்டும் கேட்போமோ சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை...’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று வருகிற சனிக்கிழமை ஏப்ரல் 23-ம் தேதி சென்னை, ராயபுரத்தில் உள்ள தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிட்டுக்குருவிகளைக் காக்க பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு 500 கூடுகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காலை நிகழ்வாக மரத்தால் ஆன பெட்டிகள் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கெடுக்க உள்ளனர். மற்றவர்களும் பங்கெடுக்கலாம். மாணவர்கள் தாங்கலாகவே கூடுகளைத் தயாரித்துக்கொள்வதற்கு இந்த பயிற்சி உதவும். அதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு கூடுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் பறவை ஆர்வலரான பேராசிரியர் முருகவேல்.
முன்பதிவுக்கு பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். https://bit.ly/3KcjrAE

பறவைகள் மற்றும் சிட்டுக்குருவிகளை அடையாளம் காண்பது எப்படி, பெருநகரங்களில் பறவைகளைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாகப் பேச இருக்கிறார் பேராசிரியர் முருகவேல். இந்தக் கூடுகளைப் பயன்படுத்தி எப்படி சிட்டுக் குருவிகளை வரவைக்கலாம், எங்கு வைக்கலாம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச இருக்கிறார் கூடுகள் அமைப்பைச் சேர்ந்த கணேஷ்.
பறவைகள் குறித்து பலனுள்ள பல விஷயங்களை இந்நிகழ்வில் தெரிந்துகொள்ளலாம். நிகழ்வில் பங்கெடுப்போருக்கு கூடுகள் இலவசமாக வழங்கப்படும். கூடுகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவுக்கு பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். https://bit.ly/3KcjrAE
நாள்: 23.4.2022, சனிக்கிழமை.
நேரம்: மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை
இடம்: தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் சாலை, ராயபுரம், சென்னை.
மேலும் விவரங்களுக்கு,
தொடர்புக்கு, செல்போன்: 95006 99699, 99400 72144