Published:Updated:

சூழலுக்கு நன்மை தரும் விதை விநாயகர்... சதுர்த்தி விழாவை இப்படியும் கொண்டாடலாம்!

விதை விநாயகர்

கோவை பட்டதாரி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணிகள் பலராலும் பாராட்டப்பட்டது. விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

சூழலுக்கு நன்மை தரும் விதை விநாயகர்... சதுர்த்தி விழாவை இப்படியும் கொண்டாடலாம்!

கோவை பட்டதாரி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணிகள் பலராலும் பாராட்டப்பட்டது. விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Published:Updated:
விதை விநாயகர்

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த சதுர்த்தி விழாவில் வீடுகள் கோயில்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

விதை விநாயகர்
விதை விநாயகர்

பெரும்பாலும் பல இடங்களில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் பெயின்ட் ஆகியவற்ற உபயோகித்து விநாயகர் சிலைகளை செய்கின்றனர். இந்தச் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப் படுவதால் நீர்நிலைகள் மாசடைவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைகிறது. இதைத் தடுக்கும் விதமாக கோவையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனமான `சோ அவேர்' களிமண்ணால் ஆன காய்கறி விதைகள் உள்ளடக்கிய விநாயகர் சிலைகளை அறிமுகம் செய்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தானியம் மற்றும் காய்கறிகளின் விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு கோவையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் இரண்டு விதங்களாகச் செய்யப்படுகின்றன. முதலாலாது, சிறிய வகையான சிலையில் வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளடக்கிய காய்கள் மற்றும் பழங்களின் விதைகள் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படுகிறது.

 சோ அவேர் | கோவை இளைஞர்கள்
சோ அவேர் | கோவை இளைஞர்கள்

இந்த வகை சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டவுடன் வீட்டிலேயே கரைத்து தோட்டத்தில் ஊற்றிவிடலாம் அல்லது ஒரு பையில் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மண் கரைந்து செடி வளர ஆரம்பித்துவிடும். இரண்டாம் வகை விநாயகர் சிலையானது உயரமானது. இந்தச் சிலைகளில் மீன்கள் மற்றும் பறவைகள் சாப்பிடக்கூடிய தானியங்களைச் சேர்க்கின்றனர்.

இதைக் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைப்பதால் மண் கரைந்து அதில் உள்ள தானியங்கள் வெளியே வந்து மிதக்கும். அதை மீன்களும் பறவைகளும் சாப்பிடலாம். கோவை பட்டதாரி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் பணிகள் பலராலும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தச் செயல் நன்மை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் மக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.