Published:Updated:

நீலகிரி: 40 ஆண்டுகளுக்குப் பிறகான அரிய காட்சி! - இருவாச்சிகளால் நெகிழும் ஆய்வாளர்கள்

Great Indian Hornbill
News
Great Indian Hornbill

40 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை சிலர் பதிவு செய்துள்ளனர். தற்போது இருவாச்சிப் பறவைகளைப் பார்க்க முடிகிறது.

கொரோனா வைரஸ் தொற்றும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும் உலகில் அசாதாரண சூழலை உருவாக்கிவருகிறது.

மலை
மலை

வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதித்து வரும் நிலையில், பொது முடக்கத்தால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையே நீடிக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருபுறம் பாதகமான நிலைமை தொடர்ந்தாலும், மற்றொருபுறம் உலகில் பெருமளவு மாசு குறைந்து பசுமை மெல்ல மீண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலை
மலை

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 5 மாதங்களாக சூழலியலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகக் காட்டுயிர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனப்‌ போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில் வன விலங்குகள் தற்போது சுதந்திரமாக உலாவுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீலகிரி காடுகளில் மலை இருவாச்சி (great Indian hornbill) பறவைகளைத் தற்போது அதிகளவில் காணமுடிகிறது. காலை மற்றும் வேளைகளில் இவற்றைக் கூட்டம் கூட்டமாகச் சாதாரணமாகத் தென்படுகின்றன. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு அரிய காட்சியைக் காணமுடிவதாகப் பறவை ஆய்வாளர்கள் மற்றும் பேர்ட் வாச்சர்ஸ் தெரிவிக்கின்றனர்.

இருவாச்சி பறவைகள்
இருவாச்சி பறவைகள்

இதுதொடர்பாக, சூழலியல் ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``மேற்குத் தொடர்ச்சி மலை பல அரிய வகை உயிரினங்களின் புகலிடமாக உள்ளது. பறவைகளைப் பொறுத்தவரை நீலகிரிக்கே உரித்தான நீலகிரி பாடும் பறவை, நீலகிரி பிப்பிட் உள்ளிட்ட பலவகை பறவையினங்கள் உள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் காரணமாக இவை கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. தற்போது பொது முடக்கத்தால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான வளர்ச்சிப் பணிகளும் தடைபட்டுள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளில் ஓரளவுக்கு வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது.

இதனால் காட்டுயிர்களின் நடமாட்டம் நல்ல முறையில் உள்ளது. தற்போது நீலகிரிக் காடுகளில் மலை இருவாச்சிகளை அதிகளவில் காண முடிகிறது. இருவாச்சிப் பறவைகள் வன வளத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அவை இருக்கும் காடுகள் காட்டுயிர்களுக்கு பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும் என்பதும் நிதர்சனம். மனித நடமாட்டத்தைத் தவிர்த்து வாழும் பழக்கத்தை இவை கொண்டிருப்பதால் எளிதில் இவற்றைக் காண முடியாது.

Great Indian Hornbill
Great Indian Hornbill

தற்போது மலைப்பாதைகளில் விரும்பிய இடங்களில் கூட்டத்துடன் சுற்றித்திரிந்து இரைதேடுகின்றன. இந்தப் பாதுகாப்பு உணர்வு அவற்றின் இனப்பெருக்கத்துக்குச் சாதகமாக அமையும்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை சிலர் பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு சில அவ்வப்போது தென்பட்டன. கடந்த பல ஆண்டுகளில் கண்டிராத இடங்களிலும் தற்போது இந்தப் பறவைகளைப் பார்க்க முடிகிறது" என்றார் உற்சாகத்துடன்.