Published:Updated:

கிரேட்டர் பள்ளத்தாக்கு காண்டாமிருகங்கள்... | முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் - 3

கிரேட்டர் பள்ளத்தாக்கு

காண்டாமிருகம் ஒரே இடத்தில் சாணி போடும் பழக்கம் கொண்டவை. இந்தப் பழக்கமே இதற்கு எதிரியாக மாறிவிட்டது. வேட்டைக்காரர்கள் அந்தச் சாணிக் குவியலுக்கு அருகில் காத்திருப்பார்கள், சாணி போட அவை வந்ததும் அவற்றை எளிதில் வேட்டையாடி விடுவார்கள்.

கிரேட்டர் பள்ளத்தாக்கு காண்டாமிருகங்கள்... | முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் - 3

காண்டாமிருகம் ஒரே இடத்தில் சாணி போடும் பழக்கம் கொண்டவை. இந்தப் பழக்கமே இதற்கு எதிரியாக மாறிவிட்டது. வேட்டைக்காரர்கள் அந்தச் சாணிக் குவியலுக்கு அருகில் காத்திருப்பார்கள், சாணி போட அவை வந்ததும் அவற்றை எளிதில் வேட்டையாடி விடுவார்கள்.

Published:Updated:
கிரேட்டர் பள்ளத்தாக்கு

சென்ற பகுதியில் கிரேட்டர் பள்ளத்தாக்கு பற்றி கூறியிருந்தேன், இந்தப் பகுதியில் எதனால் கிரேட்டர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். புல்வெளிகளும் காடுகளும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கில் 30,000-க்கும் அதிகமான வன உயிரினங்கள் வாழ்கின்றன.

கிரேட்டர் பள்ளத்தாக்கு
கிரேட்டர் பள்ளத்தாக்கு

 60 சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள், காட்டு மாடுகள், மான்கள், மற்றும் உலகின் மிக அரிதான கருப்பு காண்டா மிருகங்களும் இங்கு வாழ்கின்றன. மிகப்பெரிய பள்ளமாக இருப்பதாலும் அவற்றுக்கான உணவு, தேவைக்கேற்ப இங்கே உள்ளதால் அவை உணவுக்காகப் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. இங்கு ஏரிகள், குளங்கள் உள்ளன, அவற்றில் பறவைகளும், பலவகையான மீன் இனங்களும் உள்ளன. ஏறக்குறைய 500 வகையான பறவை இனங்கள், குறிப்பாக உலகின் மிகப்பெரிய பறவை இனமான நெருப்புக்கோழி முதல் உலகின் மிகச்சிறிய பறவையான ரீங்காரச் சிட்டு (Humming bird)  வரை இங்கு உள்ளன.

மொத்த ஆப்பிரிக்காவில் நாம என்ன என்ன காட்டுயிர்களை பார்க்கணும்னு  நினைக்கிறோமோ அதை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்துல பார்க்கணும் அப்படின்னா அதற்கு மிக அழகான இடமாக இருப்பது இந்தக் கிரேட்டர் பகுதிதான். இங்குள்ள மிகவும் அரிதான கறுப்புக் காண்டாமிருகங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

காண்டாமிருகம் (Rhinoceros)
காண்டாமிருகம் (Rhinoceros)

உலகில் இரண்டு வகையான காண்டா மிருகங்கள் உண்டு. வெள்ளை மற்றும் கருப்புக்காண்டாமிருகம். இரண்டுமே ஏறக்குறைய கருப்பு நிறங்கள் தான் ஆனால் அதன் வாய்ப் பகுதியை வைத்து இது வேறுபடுத்தப்படுகிறது.

Wide open mouth (அகன்ற வாய்ப்பகுதி கொண்டவை) பிற்காலத்தில் மருவி white rhinos (வெள்ளைக் காண்டாமிருகம்) ஆக மாறிவிட்டது.

காண்டாமிருகங்கள்
காண்டாமிருகங்கள்

40 வருடங்கள் வரை உயிர் வாழும் இவை, சொற்ப எண்ணிக்கையில் தான்சானியாவில் இருப்பதால் பார்ப்பது சற்று அரிதானச் செயல். அதிலும் கறுப்புக் காண்டாமிருகங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் இவற்றை செரங்கெட்டி தேசிய பூங்கா மற்றும் பிற பகுதிகளில் பார்ப்பது அரிதானது, எனவே இவற்றைப் பார்க்க இந்தக் கிரேட்டர் சிறந்த இடம்.

தான்சானியாவில் கறுப்புக் காண்டாமிருகங்கள் 1970-ம் ஆண்டு 1,000 எண்ணிக்கையில் இருந்தன. தற்போது அவை 100 மட்டுமே எஞ்சியிருக்கின்றன, அந்த 30,000 சதுர கிலோமீட்டர் கொண்டசெரங்கெட்டி தேசிய பூங்காவில் இவற்றை எளிதில் பார்க்க முடியுமா? அதனால் 250 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கிரேட்டர் பகுதியில் மட்டுமே இவற்றைக் காண முடியும்.

காண்டாமிருகங்கள்
காண்டாமிருகங்கள்

கிரேட்டர் பகுதியில் 1964-ம் ஆண்டு 108 கறுப்புக் காண்டாமிருகங்கள் இருந்தன, ஆப்பிரிக்க காண்டா மிருகங்களுக்கு இரட்டைக் கொம்புகள் உண்டு, இந்தக் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு 1977-ல் 25 ஆகக் குறைந்தது. அதிலும் பெண்கள் இரண்டு மட்டும்தான், இந்த நிலையில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்ட காண்டாமிருகங்கள் இனச் சேர்க்கையில் ஈடுபட, 2018-ல் அவற்றின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

காண்டா மிருகத்தின் அழகு அதன் கொம்பு. ஆனால், அதற்காகத்தான் இது வேட்டையாடப்படுகிறது! அதன் முக்கியமான ஓர் இயல்புதான் வேட்டையைச் சாத்தியமாக்குகிறது! காண்டாமிருகம் ஒரே இடத்தில் கழிவுகளை வெளியேற்றும் இயல்புடையது, அங்கு காண்டாமிருகத்தின் நீண்ட நாளையக் கழிவுகள் மொத்த குவியலாக இருக்கும். வேட்டைக்காரர்கள் அந்தச் சாணிக் குவியலுக்கு அருகில் அமர்ந்து காத்திருப்பார்கள், சாணி போட அவை வந்ததும் அவற்றை எளிதில் வேட்டையாடுவார்கள், இதன் பழக்கமே இதற்கு எதிரியாக மாறிவிட்டது என்பது வேதனைதான்.

நமது இந்தியாவுக்கு வருவோம்!

ஒற்றைக் கொம்பு கொண்ட இந்திய காண்டாமிருகங்கள் அஸ்ஸாம், நேபாளம் மற்றும் இமயமலை அடிவாரங்களில் வாழ்கின்றன. இந்தத் தொடரின் தலைப்பு `முடிவில்லா சமவெளி' அதன் பெயர் காரணம் என்ன? அந்தச் சமவெளியில் வாழும் பழங்குடி இன மக்கள் பற்றி அடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம்…

இனி நான் சென்ற அத்தியாயத்தில் சொன்ன செக்ரட்டரி பறவை பற்றி அறிந்துகொள்வோம்!

செக்கரட்டரி பறவை (Secretary bird)
செக்கரட்டரி பறவை (Secretary bird)

இதன் பெயர் காரணத்தால் எனக்கு இதை மிகவும் பிடித்துப் போனது, காலனி ஆதிக்கத்தில் மேலதிகாரிகள் சொல்ல அவரின் செக்கரட்டரி எழுதிக்கொண்டே வருவார், பேனாக்களின் மை தொட்டு எழுதுவதற்கு இதன் இறகுகள் பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கூறும்போது செக்கரட்டரி எழுதும் பேனாக்களின் மறுமுனையை அலங்கரிக்க இதன் இறகுகள் சொருகப் பட்டிருக்கும் என்றனர், எப்படியோ! செக்கரட்டரி பயன்படுத்த இறகு கொடுக்கும் தன்மையால் இதன் பெயர் செக்கரட்டரி பறவை எனச் சொல்லப்படுகிறது. 50 கிலோ மீட்டர் எல்லையை வகுத்துக்கொண்டு அதில் வாழும் இவை, மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும். பெரும்பான்மையான நேரங்களில் தரைகளில் நடந்தே இரைதேடி பொழுதைக் கழிக்கும்.

-பயணம் தொடரும்

- டாக்டர் மணிவண்ணன்