Published:Updated:

"தீபாவளிக்கு வெடிக்கு பதிலாக செடி!" பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

சுப்பாராவ்

பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன...

"தீபாவளிக்கு வெடிக்கு பதிலாக செடி!" பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன...

Published:Updated:
சுப்பாராவ்

தீபாவளி அன்று, தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும் என்று மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி  என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளக்கு
விளக்கு

''தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எந்த நாட்டில் பட்டாசு வெடித்தாலும் சூழலுக்கு பாதிப்புத்தான் ஏற்படும். பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன.

இந்த காற்றை மக்கள் சுவாசிக்கும்போது பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த தூசி மற்றும் மாசுபடுத்திகள் நமது சுற்றுச்சூழலை அழித்து, நமது ஆரோக்கியத்தை எளிதில் கெடுகின்றது. ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பாதித்தவர்கள் மற்றும் உடல் நலமில்லாத பெரியவர்ளுக்கு இந்த மாசு ஆபத்தை ஏற்படுத்தும்.

பட்டாசு
பட்டாசு

மேலும் பட்டாசுகளால் ஏற்படும் சத்தம் மற்றும் இரைச்சல் செவிமெடுக்கும் திறனை பாதிக்கிறது. பட்டாசுகளின் இரைச்சல் அளவீடுகள் அதிக ஒலி அழுத்த உச்ச அளவை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன. தற்போது உள்ள பட்டாசுகளின் சத்தம் காதுகளுக்கு வலியை ஏற்படுத்துகின்றது. சில நாடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலி வரம்புகள் மற்றும் அளவீட்டு முறைகள் வழங்கப்படுள்ளது.

ஆகவே ஆண்டுக்கு ஒரு முறைதானே என்ற நோக்கத்தில் சுற்றுச்சூழல் மற்றும் அதிக இறைச்சலை ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்தாமல் ஆளுக்கு ஒரு செடியை நட்டு நல்ல உணவை  உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்" என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.