Published:Updated:

`திடீர் காட்டுத் தீ; இரண்டு நாள் போராட்டம்!' - கட்டுக்குள் கொண்டுவந்த நீலகிரி வனத்துறை

காட்டுத் தீ
காட்டுத் தீ

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவிலான புல்வெளிகள் எரிந்து சாம்பலாயின.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட நீர்மட்டம் காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கப் போராடினர். மலைப்பகுதியில் காற்றின் வேகம் தொடந்து அதிகரிக்க, தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனது.

காட்டுத் தீ
காட்டுத் தீ

இரவு முழுக்க கொழுந்துவிட்டு எறிந்த தீயில், பல ஏக்கர் பரப்பளவிலான வனம் எரிந்து சாம்பலானது. மறுநாள் காலையும் தொடர்ந்து பரவிக்கொண்டிருந்த தீயை அணைக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் களமிறங்கினர். பொசுக்கும் வெப்பம், மூச்சைத் திணறடிக்கும் புகை என எதையும் பாராமல், பசுந்தழைகளைக்கொண்டு தீயை அணைக்கத் தொடங்கினர்.

வேட்டைத் தடுப்பு காவலர்கள், தீ தடுப்பு காவலர்கள், இதர வனத்துறை ஊழியர்கள் எனப் பலரும் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். காட்டுத் தீ குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ``நீர்மட்டம் காப்புக்காடு பகுதியில், வேண்டுமென்றே சிலர் தீவைத்துள்ளனர்.

காட்டுத் தீ
காட்டுத் தீ

இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். இந்தச் சம்பவத்தில், சுமார் 10 ஹெக்டேர் பரப்பளவிலான புல்வெளிகள் தீக்கிரையானது. மேலும், தீ பரவாமல் தொடர்ந்து கண்காணிக்கின்றோம்" என்கின்றனர்.

இதுகுறித்து ஆக்சிஜன் அமைப்பைச் சேர்ந்த சுரேஷ், கடந்த ஆண்டு வறட்சியின்போது, சுமார் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. குறிப்பாக, முதுமலை பந்திப்பூரில் ஏற்பட்ட காட்டுதீக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசமாயின. ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

காட்டுத் தீ
காட்டுத் தீ

ஆனால் தற்போது, வனத்துறை ஊழியர்கள் இலை, தழைகளைக் கொண்டே தீயுடன் போராடிவருகின்றனர். தீ தடுப்பு வீரர்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும், வனத்திற்கு தீ மூட்டுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு