Published:Updated:

``இந்த மரங்கதான் ஊர் அடையாளம்; வெட்டவிட மாட்டோம்!" - இரட்டை மரத்திற்காக மக்களின் குரல்

50 அடி உயரம் 20 அடி சுற்றளவுடன் கம்பீரமாக நிற்கும் நூற்றாண்டைக் கடந்த இரண்டு மரங்களையும் கூடலூர் நகரின் அடையாளமாகவே உள்ளூர் மக்கள் போற்றி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலையகத்தின் சமவெளி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் கூடலூர், வன வளம் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சோலை நகரமாக விளங்கி வருகிறது. முச்சந்திப்பான இந்தப் பகுதியே கேரளா ,கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. கூடலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மூன்று மாநில பேருந்துகளும் வந்து செல்கின்றன. இடவசதி குறைவாக உள்ள இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

Albizia lebbeck Trees
Albizia lebbeck Trees
Fact Check: `வளர்ந்த மரத்தை நட்டாரா வானதி சீனிவாசன்?' - வைரலாகும் புகைப்படம்; உண்மை என்ன?

இந்த நிலையில், இந்த பேருந்து நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகளுக்காக பேருந்து நிலையம் அருகில் உள்ள இரண்டு அல்பீசியா லெபெக் மரங்களை (Albizia lebbeck) அகற்ற அனுமதிக்கோரி போக்குவரத்துக்கு கழகம் தரப்பில் வருவாய்துறையிடம் முறையிட்டுள்ளனர். மாவட்ட பசுமை குழுவிடம் அனுமதிபெற்ற பின்னரே இந்த மரங்களை வெட்ட வேண்டும் என வருவாய்த்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் இந்த இரட்டை மரங்களை வெட்டுவதற்கு நாம் தமிழர் கட்சி, இந்து முன்னணி மற்றும் உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இரட்டை மரங்கள் குறித்து நம்மிடம் பேசிய கூடலூரைச் சேந்த வணிகர் தம்பி, ``எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இந்த ரெண்டு மரமும் இப்படியேதான் இருக்கு. வயசு எப்படியும் நூறுக்கு மேலதான் இருக்கும்.எங்க இருந்து பாத்தாலும் இந்த மரம்தான் கூடலூருக்கே அடையாளமா இருக்கு. சுமார் 50 அடி உயரத்துல 20 அடி சுத்தளவுள்ள இந்த மரத்தோட நிழலைத்தேடி எல்லாருமே வருவாங்க. அதுமட்டுமில்ல, ஏராளமான பறவைகள், அணில்களுக்கும் அடைக்கலமா இருக்கு. இத வெட்டாம, வேற மாத்து யோசனை செஞ்சா போதும். இந்த மரங்கள்தான் எங்க ஊருக்கு முக்கியம்" என்றார்.

மரத்தடியில் பூக்கடை நடத்திவரும் பெண் ஒருவர், ``இந்த மரங்களோட நிழல்தான் எங்களோட வாழ்வாதாரமாக இருக்கு. இந்த மரத்தடியை நம்பியே 20 குடும்பங்களுக்கு மேல இருக்கோம். இந்த மரங்களை வெட்ட மாட்டாங்கன்னு இப்போவாரை நம்பிட்டு இருக்கோம்"என்றார்.

Albizia lebbeck Trees
Albizia lebbeck Trees
ஏரிக்கரையில் மரம் வளர்ப்பது ஆபத்தா? பொதுப்பணித்துறையால் வெட்டப்பட்ட மரங்கள்; நடந்தது என்ன?

கூடலூரைச் சேர்ந்த ​​வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``இந்த இரண்டு மரங்களை வெட்டுவதற்கான அனுமதிகளை நாங்கள் வழங்க மறுத்துள்ளோம். இதனை மேற்பார்வை செய்ய மாவட்ட பசுமை குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்." எனக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம், ``கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலர் மூலம் நமக்கு கடிதம் வந்துள்ளது. இந்த மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்"என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு