Published:Updated:

`ஆஸ்திரேலியக் காட்டுத் தீ..!’ நெஞ்சை உறையவைக்கும் உயிரினங்களின் புகைப்படங்கள்

கோலாக் கரடி
கோலாக் கரடி ( nirma.com.au )

வரலாறு காணாத இந்தக் காட்டுத் தீயில் வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாக வரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாகப் பரவி வரும் காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்குக் கடும் சவாலாக மாறியுள்ளது. உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரு பகுதியாக மாறிவிடுமோ என்று சூழலியலாளர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இப்படி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ள இந்தக் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இடைவிடாமல் போராடி வருகின்றனர்.

கங்காரு
கங்காரு
@Bradfleet

இதனிடையே அங்கு சிறு தூறலுடன் கூடிய மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் காட்டுத் தீ கட்டுக்குள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தத் தீயில் வனவிலங்குகள் பலவும் உயிரிழந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

`காட்டுத் தீக்கு நடுவே தந்தையின் 5 நிமிடத் தூக்கம்!’- ஆஸ்திரேலியப் பெண்ணின் நெகிழ்ச்சிப் பதிவு

மேலும் இந்தக் காட்டுத்தீயில் இதுவரை 700-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மக்கள் வாழும் பல பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுவாசக் கோளாறு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. பேராபத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் காட்டுத்தீயில் தினந்தோறும் உயிரினங்கள் சிக்கி உயிரிழந்துவருகின்றன.

`ஆஸ்திரேலியக் காட்டுத் தீ..!’ நெஞ்சை உறையவைக்கும் உயிரினங்களின் புகைப்படங்கள்

அது தொடர்பான புகைப்படங்கள் பலவும் நெஞ்சை உறைய வைக்கின்றன. அதில் கங்காரு தன் குழந்தையைச் சுமந்து கொண்டு காட்டுத் தீயிலிருந்து தப்பியோடியுள்ளது. அப்போது வழியில் இருந்த இரும்பு வேலியில் சிக்கி அந்தக் கங்காறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதை பிராட் ஃபிளீட் என்னும் விளம்பரப் புகைப்படக்காரர் படம்பிடித்துள்ளார். அதேபோன்று மற்றொரு சம்பவம், காட்டுத் தீயில் சிக்கிய கோலாக் கரடியைத் தீயணைப்புப் படை வீரர் ஒருவர் மீட்டது, மீட்கப்பட்ட அந்த கோலாக் கரடி தீயணைப்பு வீரரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் காட்சி அதன் பாதுகாப்பை உணர்த்துவதாக அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு