Published:Updated:

இனி வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும்; ஐ. நா சபை அலற இதுதான் காரணம் !

வெப்ப அலைகள்

உலகில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த வெப்ப உமிழ்வுகள் அதிகரிப்பதை நாம் தடுக்காவிட்டால் 2026-ல் இதன் உச்சத்தை காண்போம். ஆசியா நாடுகளில் வெப்ப உமிழ்வு அதிகமாக இருக்கிறது. அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றும் நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்..

இனி வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும்; ஐ. நா சபை அலற இதுதான் காரணம் !

உலகில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த வெப்ப உமிழ்வுகள் அதிகரிப்பதை நாம் தடுக்காவிட்டால் 2026-ல் இதன் உச்சத்தை காண்போம். ஆசியா நாடுகளில் வெப்ப உமிழ்வு அதிகமாக இருக்கிறது. அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றும் நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்..

Published:Updated:
வெப்ப அலைகள்

ஐரோப்பா நாடுகளில் வெப்ப அலைகள் தாக்கி அதிகபடியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வெப்ப அலைகள் குறித்தான விஷயம் பேசு பொருளாகியுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வெப்ப அலைகள் மற்றும் மனதில் கொண்டு காலநிலை மாற்றங்களை நினைவில் வைத்துக் கொண்டாவது, வளிமண்டலத்தில் தொடர்ந்து அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
ஜெனிவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்
Tom Page

இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக வானிலை அமைப்பின் தலைவர் பெட்டெரி தாலஸ், "காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகளின் அனைத்து தணிப்பு முயற்சிகளையும் தாண்டி, உலகில் கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற வெப்ப அலைகள் ஏற்படுவது வருங்காலத்தில் மிகவும் சாதாரண ஒரு விஷயமாக மாறிவிடும். இதன் வலுவான உச்சநிலையை விரைவில் நாம் காண்போம். உலகில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த வெப்ப உமிழ்வுகள் அதிகரிப்பதை நாம் தடுக்காவிட்டால் 2026-ல் இதன் உச்சத்தை காண்போம். குறிப்பாக ஆசியா நாடுகளில்தான் இந்த வெப்ப உமிழ்வு அதிகமாக இருக்கிறது" என பெட்டெரி தாலஸ் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேற்கு ஐரோப்பாவை தாக்கி வரும் கடுமையான வெப்ப அலைகளைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு, உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அதில் பேசிய உலக வானிலை அமைப்பின் காலநிலை சேவை பிரிவின் தலைவர் ராபர்ட் ஸ்டீபன்ஸ்கி.

"முதல் முறையாக பிரிட்டனில் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்டை) வெப்பநிலையை அடைவதற்கு முன், வெப்ப அலைகள் வடக்கு பகுதிகளில் பரவி காட்டுத்தீயை ஏற்படுத்தியது. பிரான்ஸ், இங்கிலாந்து ஒருவேளை ஸ்விட்சர்லாந்து முழுவதும் வெப்ப நிலை உச்சத்தில் இருக்கலாம். எல்லோரும் எங்களைப் பார்த்து கேட்கும் கேள்வி, இது எப்போது முடிவடையும் என்பதுதான்.

உயரும் வெப்பநிலை
உயரும் வெப்பநிலை

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது இந்த நிலை அடுத்த வாரம் வரை இருக்கலாம். கடந்த ஆண்டு தெற்கு இத்தாலியில் வெப்பநிலை தெர்மா மீட்டரில் 48.8C தொட்டபோது, இத்தாலியில் அதுவரை இருந்த வெப்ப சாதனை முறியடிக்கப்பட்டது. எங்கள் கவலை என்னவென்றால் இந்த வெப்ப அலைகள் வீசிக் கொண்டிருப்பதற்கு இடையில், குறுகிய காலத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன" என்றார்.

உலக சுகாதார நிறுவனத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார இயக்குனர் மரியா நீரா, 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதை நினைவுகூர்ந்தார்.