Published:Updated:

மன்னார் வளைகுடா பாதுகாப்பாக உள்ளதா... மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

High court
High court

அங்கு ஏராளமான அரிய வகை மீன்கள், கடல் பறவைகள், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகள் காணப்படுகின்றன.

மன்னார் வளைகுடா பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின்படி கடல் பகுதியைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளைப் பாதுகாக்க கோரிய வழக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புஷ்பவனம் என்பவர் அளித்த மனுவில், "கடந்த 2018 முதல் 2027 வரைமன்னார் வளைகுடா பகுதியில் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா தீவுகள்
மன்னார் வளைகுடா தீவுகள்
விகடன்

அங்கு ஏராளமான அரிய வகை மீன்கள், கடல் பறவைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிக்கு அப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அறுந்துபோன பழைய மீன்பிடி வலைகளைக் கடலில் தூக்கி வீசுகின்றனர்.

இதனால் ஒட்டு மொத்த கடல் பகுதி அதன் சுற்றுச்சூழல் முழுவதும் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்கள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது. சுமார் ஆறு முதல் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்கள் கடல் பகுதிகளில் உள்ளன.

மன்னார் வளைகுடாவில் உள்ள ஒரு தீவு
மன்னார் வளைகுடாவில் உள்ள ஒரு தீவு

எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின்படி கடல் பகுதியைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கூறி தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது மனு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 15.02.2021 அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு