Published:Updated:

காலநிலை மாற்றத்தால் இந்தியப் பருவமழையில் ஏற்படும் அதீத மாற்றங்கள்; எதிர்காலத்தின் நிலை என்ன?

கோடைக்காலம் அல்லது தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் மொத்த வருடாந்தர மழைப்பொழிவில் 70% பங்கை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% பங்கை வகிக்கும் வேளாண் பொருளாதாரத்துக்கு இது மிகவும் முக்கியமாகும்.

பருவநிலை மாற்றம் இந்தியாவின் பருவகால மழையை மேலும் ஒழுங்கற்றதாக்கியது. ஆகஸ்ட்டில் அசாதாரண வெப்பம் மற்றும் செப்டம்பரில் அசாதாரண மழை ஆகியவற்றின் காரணமாக 2021 கோடைப் பருவம் முடிவடையும் நேரத்திலும் இந்தியாவை யூகிக்க வைத்தது, எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் எதிர்பார்க்கலாம் என்கிறது பருவகால மாற்றப் பகுப்பாய்வுகள்.

கடந்த இரு பருவ மழைக் காலங்களில் மழைப் பொழிவு கூடுதலாக இருந்த காரணத்தால், இந்தியாவின் கோடைக்கால பருவ மழை அதிகரித்தது என்னும் கருத்து நிலவத் தொடங்கியது. ஆனால், இந்திய அரசு மற்றும் சர்வதேச பருவநிலை மாற்றப் பகுப்பாய்வுகளின்படி கடந்த 60 ஆண்டுகளில் இம்முறை 6% குறைந்துள்ளது என்பதே உண்மை. 2021-ல் கோடைக்காலப் பருவ மழை `இயல்பு’ என்றாலும் கூட, ஏராளமான மழைப் பொழிவுகளும், மழை பரவல் வடிவங்களில் மாறுபாடுகளும் நிகழ்ந்துள்ளன என்றும், இவ்விரண்டும் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்று பகுப்பாய்வுகள் எச்சரிக்கின்றன.

கோடைக்காலம் அல்லது தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் மொத்த வருடாந்தர மழைப்பொழிவில் 70% பங்கை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% பங்கை வகிக்கும் வேளாண் பொருளாதாரத்துக்கு இது மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் 2021-ல் பருவகால மழைப்பொழிவு 870 மி.மீ என்றும் 1961 - 2010 வரைக்குமான நீண்ட கால சராசரி (எல்.பி.ஏ) மழைப் பொழிவு 880 மி.மீ என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் 1-ம் தேதி செய்தி குறிப்பு கூறுகிறது. நடப்பு ஆண்டு பருவகால மழை நீண்ட கால சராசரியின் 99% என்னும் நிலையில் அதை `இயல்பு’ என்று வகைப்படுத்தலாம்.

பருவமழை
பருவமழை
கால்வாய்கள் கட்டப்பட்டபின் கிராமப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? ஆய்வு கூறும் உண்மை!

இந்த இயல்பு சாத்தியப்பட்ட முறை முன்னெப்போதும் இல்லாத வகையாகும் என்கிறது ஐஎம்டி தரவு. ஜூன் மாதம் இயல்பு அளவுகளுக்கு 110% என்ற கணக்கில் ஆரோக்கியமாகத் தொடங்கிய பருவமழை, ஜூலையில் 93% மற்றும் ஆகஸ்டில் 76% எனப் படிப்படியாக வறட்சி அளவுகளுக்குக் குறைந்தது. பின்னர், செப்டம்பரில் எல்.பி.ஏ அளவுகளுக்கு 135% என அரிதாக அதிகரித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மற்றும் செப்டம்பரில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பொழிந்தது. ஜூலையில் மகாராஷ்டிராவிலும், செப்டம்பரில் குஜராத்திலும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். அக்டோபர் 9-ம் தேதி ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த பலத்த மழை இரட்டை நகரங்களை வெள்ளக் காடாக்கியது. `டவ்தே' மற்றும் `குலாப்' ஆகிய சூறாவளிகள் 2021-ல் கோடைப் பருவகால மழையைப் புத்தக ரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அவை இன்னும் தீவிரமடையலாம் என்று இந்தியாஸ்பெண்ட் 2021 மே மாதம் வெளியிட்ட அறிக்கை கவனிக்கத்தக்கது.

ஆகஸ்ட் மத்தியில் தர மதிப்பீடு முகமையான க்ரிஸில் நிறுவனம் நாடு முழுமைக்குமான மழைப் பொழிவு பரவல் வகைகள் குறித்த கவலைகளை வெளியிட்டுள்ளது. முக்கியமாகக், கரீஃப் பருவ விதைக்கும் மாதங்களான ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில், பருவகால மழை சிறிது இடைவெளி கொடுத்து விடுப்பில் சென்றுவிட்டது. அணைகளில் நீர் மட்டம் குறையத் தொடங்கியது குறித்தும் அச்சம் தெரிவித்தது. பின்னர், செப்டம்பரில் அதிக மழைப் பொழிவு காரணமாக, அணைகளின் தண்ணீர் மட்ட உயர்வையும், கரீஃப் பயிர்கள் விதைப்புப் பகுதி அதிகரிப்பையும் அக்டோபர் முதல் வார அதிகாரபூர்வ தரவில் உறுதிப்படுத்தியது.

ஆனால், வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் செப்டம்பர் மாத மழைப்பொழிவு ஆகஸ்ட் இறுதி வரையிலான ஒட்டுமொத்தப் பருவமழைப் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியவில்லை. இதில் வட மேற்குப் பகுதி இன்னும் கடுமையான பாதிப்புக்குள்ளானது. அக்டோபர் 8-ம் தேதியின் நிலவரப்படி வடகிழக்கின் பெரும்பான்மை மற்றும் இந்திய-கங்கைச் சமவெளியின் சில பகுதிகளில் வறட்சி அதிக அளவில் காணப்பட்டதாக இந்திய தொழில்நுட்ப நிலையத்தின் வறட்சிக் கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது.

விவசாயம்
விவசாயம்

செப்டம்பர் மாத இயல்புக்கு அதிகமான மழைப்பொழிவு பருவகாலப் பயிர்களின் விளைச்சலைக் குறுகிய காலம் பாதித்தது என்பது நிபுணர்களின் கருத்து. செப்டம்பரில் பெய்த அதீத மழையால் பஞ்சாப் மற்றும் ஹரியானா நெல் அறுவடை தாமதமானது என்று மத்திய அரசு அக்டோபர் 1-ம் தேதி தெரிவித்தது. சமீக காலங்களில் அக்டோபரில் பெய்த மழை கணிக்க முடியாமல் போனதால், விவசாயிகளுக்கு நிபுணர்களால் உரிய ஆலோசனை வழங்க இயலவில்லை. 2021-ம் ஆண்டின் பருவ மழை முடிவுக்கு வர வேண்டிய தேதிகள் திருத்தப்பட்டும், நீட்டிக்கப்பட்ட பின்னரும் தவறிப்போனதால், அக்டோபரில் நிச்சயமற்ற தன்மையே நிலவியது.

பருவமழையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை பருவகால மாற்றத்தைப் பெருக்கும் என்றும், இந்தப் பருவகால மாற்றம் நடப்பு நூற்றாண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த பருவகால மழையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமீபத்திய பருவகால மழைப்பொழிவு வகைகளின் அதிகரிக்கும் வேறுபாடுகள், இந்த மாற்றங்கள் ஏற்கெனவே தொடங்கியதற்கான அறிகுறியாகவே தென்படுகின்றன என்கின்றனர் வானிலை நிபுணர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிராந்தியங்களில் சீரற்றும், காலம் தவறியும் பரவலாகப் பொழிந்த மழை

2021-ல் நாடு தழுவிய கோடைப் பருவமழை நான்கு பிராந்தியங்களில் (தென் தீபகற்பம் - தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் யூனியன் பிரதேசங்கள்; மத்திய இந்தியா - குஜராத், மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா; கிழக்கு & வடகிழக்கு இந்தியா - பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அனைத்து வட கிழக்கு மாநிலங்கள்; வட மேற்கு இந்தியா - ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், லடாக், இமாசலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்தரப் பிரதேசம்) சீரற்றும், காலம் தவறியும், பரவலாகப் பொழிந்தது.

அனைத்துப் பிராந்தியங்களிலும் ஜூன் மாதம் இயல்புக்கு அதிகமாகவே மழை பொழிந்தது. ஜூலையில் தொடங்கிய மழைப் பொழிவு பற்றாக்குறை நான்கில் மூன்று பிராந்தியங் களில் இயல்புக்குக் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், தெற்கு தீபகற்ப மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மழைப் பொழிவு ஜுலை இயல்புக்கு மாறாக 26% அதிகம் காணப்பட்டது. கிழக்கு மற்றும் வட கிழக்கு தவிர, ஏனைய பிராந்தியங்கள் ஆகஸ்ட் மாத மழைப் பொழிவு இயலபுக்குக் குறைவாகவே இருந்தது.

Rain (Representational Image)
Rain (Representational Image)
குறைந்த செலவில் நெல் சாகுபடி; `டிரம் ஷீடர்' இயந்திரம் மூலம் அசத்தும் விவசாயி!

24% பற்றாக்குறையுடன் 2009-க்குப் பிறகு, 2021-ல் முதல் வறட்சி ஆகஸ்ட்டில் நிலவியது என்று பருவகால மற்றும் ஆற்றல் மாற்றங்கள் குறித்து டெல்லியிலுள்ள கிளைமேட் டிரெண்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாத இறுதி ஒட்டு மொத்த மழைப் பொழிவு -11% என்ற விகிதத்துடன் பருவமழைப் பற்றாக்குறையுடன் நிறைவடைந்தது. நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி கடுமையான வறட்சிக்கான அச்சுறுத்தலைச் சந்தித்தது.

இந்தியத் துணைக் கண்டத்தில் பயிரிடும் இரு பருவங்கள் கரீஃப் (பருவமழை தொடங்கும் போது பயிரிடுதல்) மற்றும் ரபி (பருவமழை முடியும்போது பயிரிடுதல்) ஆகும். எனவே கரீஃப் பருவம் என்பது பருவமழைப் பொழிவையே முழுவதும் நம்பியிருக்கும். செப்டம்பர் 17-ல் இந்தியாவில் 110.5 மில்லியன் ஹெக்டேரில் கரீஃப் பயிரானது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே வாரத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக 4% அதிகம் மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது குறைவு என்கிறது மத்திய வேளாண் அமைச்சகம். கடந்த 5 ஆண்டு சராசரியில், பயிரிடப்பட்ட பகுதிகளில், 21 முக்கியப் பயிர்களில், 7 பயிர்கள் 5% குறைந்திருந்தது. ஒட்டு மொத்தம் பயிரிடப்பட்ட பகுதிகளில் கரீஃப் பயிர்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.21% அதிகரித்தாலும், 21 முக்கியப் பயிர்களில் 6 பயிர்களுக்கான பற்றாக்குறையும் உயர்ந்தே காணப்பட்டது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிரிட்ட நெல்லின் முதிர்வு செப்டம்பரில் பருவம் தவறிய மழையால் தாமதமானது என்று அக்டோபர் 1-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிரான நெல்லில் 18% - 22% ஈரப்பதம் அதிகம் காணப்பட்டதால், அக்டோபர் 11-ல் கொள்முதலைத் தொடங்க வசதியாக, நெல் உலர்த்துவதில் விவசாயிகளுக்கு உதவுமாறு இரு மாநில முகமைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தின.

``செப்டம்பர் கடுமையான மழைப்பொழிவு வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு, சோயா, சோளம் உள்ளிட்ட குறுகிய கால கரீஃப் பயிர் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே அறுவடையாகி சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் தரம் கடுமையான மழைப் பொழிவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது" என்கிறார் க்ரிசில் ஆய்வு மைய இயக்குநர் ஹெடல் காந்தி.

``மழையின் காரணமாக வெங்காயம் அழுகும் என்ற அச்சத்தில் விவசாயிகள் குறைந்த விலையில் முன்கூட்டியே சந்தைப் படுத்தினர். செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் விற்றிருந்தால் நல்ல விலை கிடைத்திருக்கும். ஆனால், தொடர் மழை காரணமாக விவசாயிகள் தங்கள் விளைச்சலின் பெரும்பகுதியை முன்னதாகவே விற்றதால், தேவைவைவிட அதிக அளவு சந்தையில் குவிந்து வெங்காயத்தின் விலை சரிய காரணமானது. ரபி பருவ விதைப்புக்கு முன்பாகப் பருவம் தவறிய மழைப்பொழிவு இப்போதைக்கு இருக்காது என்று நம்புவோம்" என்றார் காந்தி.

IndiaSpend
IndiaSpend

Source:- Tanvi Deshpande/ Indiaspend.org

Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.

தமிழில்: ஜனனி ரமேஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு