Published:Updated:

இப்படித்தான் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றினோம்; சுவாரஸ்யம் பகிரும் பாகன்கள்!

சின்னத்தம்பி யானை

"கேம்ப்ல இருக்கற மத்த யானைகள் இவரைப் பார்த்தா பயப்படுது. ஆனா, யாரா இருந்தாலும் இவர் பயப்படறது இல்ல." - கும்கியாக மாறிய சின்னத்தம்பி யானை குறித்து பாகன்கன் தகவல்.

இப்படித்தான் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றினோம்; சுவாரஸ்யம் பகிரும் பாகன்கள்!

"கேம்ப்ல இருக்கற மத்த யானைகள் இவரைப் பார்த்தா பயப்படுது. ஆனா, யாரா இருந்தாலும் இவர் பயப்படறது இல்ல." - கும்கியாக மாறிய சின்னத்தம்பி யானை குறித்து பாகன்கன் தகவல்.

Published:Updated:
சின்னத்தம்பி யானை

கோவை, தடாகம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு சின்னத்தம்பி என்கிற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்தனர். விவசாய நிலத்தை சேதப்படுத்துகிறது என எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னத்தம்பி யானைக்கு கோவை மக்களிடையே நிறைய ரசிகர்கள் உள்ளனர். வனத்துறை பிடிக்கும்போது ஏற்பட்ட காயங்களால், அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையெல்லாம் கடந்து சின்னத்தம்பி யானையைப் பிடித்து, டாப்ஸ்லிப் கோழிக்கழுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பயிற்சி அளித்து வந்தனர். இந்நிலையில், சின்னதம்பி யானை கும்கியாக உருவாகி முதல் ஆபரேஷனுக்குச் சென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே,

சின்னத்தம்பி யானை
சின்னத்தம்பி யானை

ஒரு காட்டு யானையைப் பிடிக்கும் ஆப்ரேஷனுக்காக கலீம் கும்கி யானையுடன், சின்னத்தம்பி யானையும் அழைத்து செல்லப்பட்டுள்ளது. சின்னத்தம்பிக்குச் செல்லதுரை மற்றும் காளியப்பன் ஆகியோர் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பாகன்கள் கூறுகையில், “கேம்ப்ல வெச்சே ட்ரெய்னிங் கொடுத்துட்டு இருந்தோம். கயிறு இழுக்கறது, கயிறை மிதிக்கறது மாதிரியான ட்ரெய்னிங் கொடுத்தோம். டாப்ஸ்லிப்ல தங்கி 15 நாள்கள் சின்ன சின்ன வேலைகள் செய்ய வெச்சோம்.

சின்னத்தம்பி யானை
சின்னத்தம்பி யானை

அதுக்கப்புறம் மரம் தூக்கறது, தள்ளறது எல்லாம் பண்ண ஆரம்பிச்சுது. யானை ரெடியாகிடுச்சுனு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. கேம்ப்ல இருக்கற மத்த யானைகள் இவரைப் பார்த்தா பயப்படுது. ஆனா, யாரா இருந்தாலும் இவர் பயப்படறது இல்ல.

கலீம் யானையோட சேட்டை, குணம் பழக்கவழக்கம்லாம் அப்படியே இவர்கிட்ட இருக்கு. கலீம் மேல வெச்ச நம்பிக்கைய, அப்படியே சின்னத்தம்பி மேல வெச்சுருக்கேன். கிடைச்ச வாய்ப்ப சரியா பயன்படுத்திக்கணும்னு வந்துட்டோம். நாங்க ரெண்டு பேர் இருந்தா ரொம்ப சாதுவா இருக்கார்.

 சின்னத்தம்பி யானை பாகன்கள்
சின்னத்தம்பி யானை பாகன்கள்

யார் வேணும்னாலும் இந்த யானைக்கிட்ட போகலாம். நாங்கள் ரெண்டு பேரும் இல்லாட்டிதான் கொஞ்சம் முறைக்கிறார். கலீம் இல்லாத காலத்துல, இவர் அந்தப் பேரை காப்பத்துவார். முதல் ஆபரேஷன். வண்டில ஏறுமானு சந்தேகமா இருந்துச்சு. ஆனா, அசால்ட்டா ஏறி நின்னு எங்களையே ஆச்சர்யப்படுத்திருச்சு” என்றனர்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு சின்னத்தம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சின்னத்தம்பி யானை
சின்னத்தம்பி யானை

அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism