Published:Updated:

`90-களைவிட 6 மடங்கு வேகத்தில் உருகும் பனிப்பாறைகள்!' - வேகமாக உயரும் கடல் மட்டம்

உருகும் பனிப்பாறைகள்
உருகும் பனிப்பாறைகள்

தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகத்தை வைத்துப் பார்த்தால் 2100-ல் 70 செ.மீ வரை கடல் மட்டம் உயர்வுக்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன எனும் தகவல்கள் அவ்வப்போது வரும்.

உருகும் பனிப்பாறைகள்
உருகும் பனிப்பாறைகள்

தற்போது அது இன்னும் மோசமடைந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் அமைப்பான Intergeovermental Panel of Climate Change (IPCC) மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் பனிக்கட்டிகள் முன்பைவிட வேகமாக உருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

முகத்தை ஸ்கேன் செய்து தகவல் சொல்லும் Clearview AI... ஆப்பிள் ஏன் தடை செய்தது?

1992-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவைச் சேர்ந்த 6.4 ட்ரில்லியன் டன் பனிக்கட்டி உருகியுள்ளது. இது 17.8 மில்லிமீட்டர் அளவு கடல் மட்டத்தை உயர்த்தியுள்ளது. இதனால் கடலோரத்தில் வாழ்ந்து வரும் 400 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-களில் வருடத்துக்கு 81 பில்லியன் டன் அளவுக்குத்தான் பனிப்பாறைகள் உருகி வந்தது. ஆனால், தற்போது இதன் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2010-ல் வருடத்துக்கு 475 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகிவருகின்றது. இது 90-களில் உருகியதைவிட 6 மடங்கு அதிகம்.

5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... ஆஸ்விச் வதைக்கூடம்!
உருகும் பனிப்பாறைகள்
உருகும் பனிப்பாறைகள்

இதற்கு முன்னர் இருந்த தரவுகளின்படி 2100-ல் 53 சென்டிமீட்டர் அளவு கடல் மட்டம் உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகத்தை வைத்துப் பார்த்தால் 2100-ல் 70 செ.மீ வரை கடல் மட்டம் உயர்வுக்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை 11 சாட்டிலைட் தரவுகள், 26 பனிப்பாறைகள் குறித்த சர்வேக்களை, உலகின் 50 நிறுவனங்களிலிருந்து 89 ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து சேகரித்துள்ளனர்.

இன்னும் புவி வெப்பம் ஆக ஆக பனிப்பாறைகள் உருகுவது இன்னும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கும், இதனால் கடலோரங்களில் வாழும் மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனத் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு