Published:Updated:

சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச் செய்தால், இந்தியாவின் பருவகால இலக்குகள் தடம் புரளும்!

சுற்றுச்சூழல்

2070-க்குள் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களை முற்றிலுமாக அகற்றும் இலக்கை எட்ட 2021-ல் இந்தியா உறுதி பூண்டாலும், நிர்ணயித்த இலக்குக்கும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையே பல்வேறு முரண்கள் நிலவுகின்றன.

சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச் செய்தால், இந்தியாவின் பருவகால இலக்குகள் தடம் புரளும்!

2070-க்குள் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களை முற்றிலுமாக அகற்றும் இலக்கை எட்ட 2021-ல் இந்தியா உறுதி பூண்டாலும், நிர்ணயித்த இலக்குக்கும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையே பல்வேறு முரண்கள் நிலவுகின்றன.

Published:Updated:
சுற்றுச்சூழல்

2070-க்குள் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களை முற்றிலுமாக அகற்றும் இலக்கை எட்ட 2021-ல் இந்தியா உறுதி பூண்டாலும், நிர்ணயித்த இலக்குக்கும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையே பல்வேறு முரண்கள் நிலவுகின்றன. விதிகளை மீறும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதுடன், வனம் சாராத பயனர்களுக்கு வனப் பகுதி நிலங்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் சுத்தமான ஆற்றலுக்காகத் தேசிய ஹைட்ரஜன் மற்றும் நிலக்கரிக்கு மாற்றாகப் பன்னாட்டு சூரிய சக்தி பசுமை மின் விநியோக முனைவு ஆகிய கொள்கைகளை அரசு அறிவித்தது. இருப்பினும், சில முக்கியத் திட்டங்களுக்கு வனப்பகுதி நிலத்தை, வனம் சாராத பயன்பாட்டுக்கும் அனுமதிக்கும் வகையில் இந்திய அரசு 1980 வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இதன் காரணமாக அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விலக்கப்பட்டதுடன், வட கிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் பாமாயில் உற்பத்தி அதிகரிக்கவும் வழிவகுத்தது.

சுற்றுச்சூழல் மாசு
சுற்றுச்சூழல் மாசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2015 பாரிஸ் ஒப்பந்த அடிப்படையில் 2022-க்குள் 175 ஜிகா வாட் மற்றும் 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை இந்தியா நிர்ணயித்தது. ஆனால், 2021 அக்டோபர் மாதத்திலேயே 100 ஜிகா வாட் திறனை இந்தியா எட்டியதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. 2022-க்குள் நிர்ணயிக்கப்பட்ட 40% இலக்குக்கு எதிராக, 2021 அக்டோபர் 31 முடிய, 39% இந்தியாவின் நிறுவப்பட்ட மின் திறன், புதை படிவமற்ற ஆதாரங்களிலிருந்தே கிடைத்துள்ளது.

காற்றாலை, சூரிய சக்தி உள்ளிட்ட பெரும் தொழில் சுத்தமான ஆற்றல் திட்டங்களை இந்தியா தீவிரமாக ஊக்குவிக்கிறது. இருப்பினும், பொது நிலங்களைப் புதுப்பிக்கத்தக்கத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் அங்கீகரிக்காததால் பல்வேறு மோதல்கள் உருவாகின்றன. இதற்குத் தீர்வாக, மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை இந்தியா ஊக்குவித்தால் மோதல்களைக் குறைக்கலாம். ஆனால், மேற்கூரை சூரிய மின் உற்பத்திக்கான செலவு அதிகம் என்பதுடன் மானியத் திட்டங்களும் போதுமானதாக இல்லாததால் பரவலான வரவேற்பைப் பெறவில்லை.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

2021 ஆகஸ்ட்டில் இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தேசிய ஹைட்ரஜன் திட்டம் அறிவிக்கப்பட்டது. தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கப், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்திப் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகளில் எரிபொருளாகவும், எஃகு மற்றும் ரசாயனத் துறைகளில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பசுமை ஹைட்ரஜன், கரிம நீக்கத்துக்கும் உதவும். மேலும், மின் உற்பத்தியில் புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாகவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிக்கவும் பயன்படுத்தலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் ஆற்றல் தேவையை இரு புதைபடிம எரிபொருள்களான நிலக்கரி (44%) மற்றும் எண்ணெய் (25%) ஆகியவை நிறைவு செய்கின்றன. இருப்பினும் சி.ஓ.பி 26 மாநாட்டில் இந்தியா 2070-க்குள் நிகர ஜீரோ இலக்கை எட்டும் உறுதி நிறைவடைய, அடுத்தடுத்து வரும் பத்தாண்டுகளில் நிலக்கரி மற்றும் எண்ணெய் மீதான சார்புத் தன்மையை இந்தியா கணிசமாகக் குறைத்தே தீர வேண்டும்.

அதே தருணம் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு ‘மாசுபடுத்த உரிமம்’ வழங்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு அறிவிக்கை களை இந்தியா வெளியிட்டுள்ளது என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் குறிப்பு கூறுகிறது. நிலக்கரி அடிப்படையிலான தொழிற்சாலைகள் நச்சு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாகச் செயல்பட வேண்டிய காலத்தை 2022-லிருந்து 2025-க்கு நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2021 ஏப்ரலில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 72% நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தித் தொழிற்சாலைகள் மேலும் 2 - 3 மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்பதே இதன் பொருளாகும்.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

2021 ஜுன் மாதம் மத்திய மின் ஆணைக்குழு நச்சு உமிழ்வு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கெடுவை 2015-ல் இருந்து 2035-க்கு நீட்டிக்க வலியுறுத்தியுள்ளது. 2070 நிகர பூஜ்ய இலக்கை எட்ட வேண்டுமெனில், 2035-க்குள் இந்தியா நிலக்கரிப் பயன்பாட்டை முற்றிலும் அகற்றியே தீர வேண்டும். எனவே, 2035 வரை அனல் மின் நிலங்களுக்குச் சலுகைகள் வழங்க திட்டமிட்டால், முற்றிலுமாக அவற்றை எப்போது அகற்ற இயலும்?’ எனக் கேட்கிறார் மன்தன் அத்யயன் கேந்திர ஆய்வு அமைப்பின் ஆய்வாளர் ஸ்ரீபாத தர்மாதிகாரி.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் சுற்றுச்சூழல் நட்பான எரி சாம்பலை 100% பயன்படுத்த வேண்டுமென்றும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென்றும், 2021 ஏப்ரலில், சுற்றுச்சுழல், வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து அறிவிக்கை வெளியிட்டும், 50% தொழிற்சாலைகள் எரி சாம்பலைத் திறந்த வெளியிலும், நீர்நிலைகளிலும், மூடப்படாத குழிகளிலும் தொடர்ந்து கொட்டி வருகின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேடு
சுற்றுச்சூழல் சீர்கேடு

வனம் சாராத பணிகளான விவசாயம், கட்டுமானம், சுரங்க வேலை ஆகியவற்றை மேற்கொள்ள, 1980 வனப் பாதுகாப்பு சட்டத்தில் அக்டோபர் மாதம் சுற்றுச்சூழல் அமைச்சம் சில திருத்தங்களை மேற்கொண்டது. வனப் பகுதிகளில், வனம் சாராத எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளுக்கும் அனுமதி இல்லை என்னும் முந்தைய சட்டத்தை இத்திருத்தம் மீறுவதாக சமூகர் ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

பருவகால மாற்ற அபாயங்களுக்கு எதிராகப் போராடும் முக்கிய சக்தியாக காடுகள் விளங்குகின்றன. மேலும், பல்வேறு உயிரினங்கள் வாழ ஆதாரமாக விளங்குவதுடன், கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராணவாயுவை வெளியேற்று கின்றன. வனப் பாதுகாப்புச் சட்டப்படி மத்திய, மாநில அரசுகளின் அனுமதியின்றி மரங்களை வெட்டுவதும், வனப் பகுதிகளில் வனம் சாராத பணிகளை மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி பெறாவிட்டால் பொது மக்கள் கருத்துக் கேட்பு உள்பட அனைத்து அம்சங்களையும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பழைய விதி. இதை மாற்றி 50% திட்டப் பணிகள் நிறைவடைந்திருந்தால் எதுவுமே தேவையில்லை என 2021 மார்ச்சில் மத்திய அரசு 2006 சுற்றுச்சூழல் விளைவு பகுப்பாய்வுச் சட்டத்தில் திருத்தங்களை அறிவித்தது. 2006 அறிவிக்கை 2020 வரை 15 முறை திருத்தப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் முன் அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க 2021 ஜூலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய வழிகாட்டு முறைகளை அறிவித்தது. ஆனால், இவற்றிலுள்ள அம்சங்கள், எந்த வகையிலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப் போதுமானதாக இல்லை.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

மத்திய அரசு அந்தமான & நிக்கோபார் தீவுகளில் மிகப் பெரிய வர்த்தக, சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகச் சுற்றுச்சூழல் மற்றும் இன ரீதியான தீவுகள் சூழ்ந்த கடற்பகுதி என்னும் சிறப்பு அந்தஸ்தை அந்தமான் & நிக்கோபார் தீவுகள் இழக்க நேரிடும். அந்தமான் & நிக்கோபார் 8,249 சதுர கி.மீ பரப்பளவுடன் 836 தீவுகளைக் கொண்ட யூனியன் பிரதேசமாகும். 8,249 சதுர கிமீ பரப்பளவில், 9 தேசிய பூங்காக்கள், 96 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 1 உயிர்கோளக் காப்பகம் உட்பட 80% (6751 சதுர கி.மீ) வனப் பகுதியாகும். 2011 முதல் 2019 வரை 0.28% வனப்பகுதி எல்லை அதிகரித்தாலும், வனப் பகுதியின் அடர்த்தி 2021 நவம்பர் முடிய 71% (1,732 சதுர கி.மீ) குறைந்துள்ளது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

2021 ஆகஸ்டில் மத்திய அமைச்சரவை பாமாயில் உற்பத்தியை விரிவுபடுத்த ரூ 11,040 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 1 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பனை சாகுபடி மூலம் பாமாயில் உற்பத்தியில் `ஆத்ம நிர்பர்’ அல்லது `தன்னிறைவு’ பெறலாம். பனை சாகுபடிக்கு இந்தியாவின் வட கிழக்குப் பிராந்தியம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீர்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாமாயில் எண்ணெய் சாகுபடியாகும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீருக்கு அச்சுறுத்தலாக இருக்குமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்திய அரசின் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

- ஜனனி ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism