Published:Updated:

அரிய வகை மீன்கள், பவளப்பாறைகள் காண வேண்டுமா... குருசடை தீவு செல்லுங்கள்!

குருசடை தீவு

பவளப்பாறைகள், அரிய வகை மீன்கள், கடல் அட்டைகள், கடல் பசுக்கள், டால்பின்கள், அரிய வகை செடி, கொடிகள் என இயற்கை சார்ந்த பல விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு தீவுதான் குருசடை தீவு.

அரிய வகை மீன்கள், பவளப்பாறைகள் காண வேண்டுமா... குருசடை தீவு செல்லுங்கள்!

பவளப்பாறைகள், அரிய வகை மீன்கள், கடல் அட்டைகள், கடல் பசுக்கள், டால்பின்கள், அரிய வகை செடி, கொடிகள் என இயற்கை சார்ந்த பல விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு தீவுதான் குருசடை தீவு.

Published:Updated:
குருசடை தீவு

அட ஆமாங்க! பவளப்பாறைகள், அரிய வகை மீன்கள், கடல் அட்டைகள், கடல் பசுக்கள், டால்பின்கள், அரிய வகை செடி, கொடிகள் என இயற்கை சார்ந்த பல விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு தீவுதான் குருசடை தீவு.

இந்த அழகான தீவு எங்க இருக்கு, எப்படி போகலாம், தீவுக்குள்ள என்னவெல்லாம் இருக்குனு தெளிவா பார்க்கலாம் வாங்க...

குருசடை தீவு
குருசடை தீவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய தீவு. தமிழ்நாடு வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னர் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவிற்கு கீழ் 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகள் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை அமைந்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் உள்ள தீவுதான் குருசடை தீவு.

பொதுவாக கடல்சார் தேசிய பூங்காவிற்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக மீனவர்கள் நலன் கருதி இத்தீவுக்கு நம் தமிழ்நாடு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அனுமதித்துள்ளனர். மார்ச் 11, 2022 ஆம் நாள் படகுசவாரியை குருசடை தீவுக்கு தொடங்கி வைத்தனர்.

குருசடை தீவு
குருசடை தீவு

இந்த படகுசவாரி பாம்பனிலுள்ள குந்துக்கால் வனத்துறை படகு இயங்கும் தளத்திலிருந்து தொடங்கி குந்துக்கால் தீவில் முடிவடையும். படகில் பயணிக்கும்பொழுது பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடத்தில் படகை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பவளப்பாறைகளை காண்பித்து அதன் தன்மைகளை பற்றி வனத்துறையை சேர்ந்தவர்கள் விளக்குகிறார்கள். மேலும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் பாசிகள் போன்றவற்றை பற்றியும் தெளிவாக விளக்கி கூறுகின்றனர்.

குந்துக்காலிருந்து குருசடை தீவுக்கு படகு சவாரி வெறும் 1 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. ஆனால் கடலில் பவளப்பாறைகள் போன்ற கடல்சார்ந்த பல விஷயங்கள் மற்றும் பல தீவுகளை பற்றி நமக்கு காண்பித்து விளக்குவார்கள். அதனால் நாம் அதிக நேரம் நடுக்கடலில் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த படகு சவாரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கும். நமக்கு ஏற்ற நேரத்தை நாம் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

குருசடை தீவு
குருசடை தீவு

படகு சவாரி மற்றும் குருசடை தீவை சுற்றி பார்ப்பதற்கு ஒரு நபர்க்கு 300 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. ரொம்ப அதிகமாக தெரிகிறதா? முதலில் 400 ரூபாய் ஆக இருந்தது, இப்பொழுது 300 ரூபாய் ஆக குறைத்து உள்ளனர். டிக்கெட்டை குந்துக்காலில் உள்ள வனத்துறை மையத்தில் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஒரு படகில் சுமார் 12 பேர் வரை பயணிக்கலாம். நம் பாதுகாப்பிற்காக அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் தருவர். மேலும் பயிற்சிபெற்ற ஒரு லைஃப் கார்டும் நம்முடன் படகில் இருப்பார்.

இப்போ தாங்க நம்ம தீவுக்குள்ளயே போக போறோம்….

   தீவுக்கு படகுல வந்து சேர்ந்த பிறகு, முதலில் அங்குள்ள ஒரு போர்டைக் காட்டி நம்ம இருக்குற தீவைப்பற்றியும் நம்மல சுற்றி இருக்கிற தீவைப்பற்றியும் நம்மக்கூட வந்த வனத்துறையை சேர்ந்தவங்க  விளக்குவாங்க.  நம்மலும் ஒரு தீவுக்குள்ள இருக்கோம்னு கேட்கும்போது ஒரே குஷியா இருக்கும். இது என்ன, போக போக இன்னும் ரொம்ப குஷியா இருக்கும்.

அரிய வகை மீன்கள், பவளப்பாறைகள் காண வேண்டுமா...  குருசடை தீவு செல்லுங்கள்!

போர்ட காட்டி முடுச்ச பிறகு நம்மள ஒரு டேபிள்கிட்ட கூட்டிட்டு போவாங்க. அந்த டேபிள் பூரா டால்பினோட மண்டையோடு, விலா எழும்பு, தாடை எலும்பு, தடை செய்யப்பட்ட சங்கு, ஆமையோட மண்டையோடு, முதுகெலும்பு, பவளப்பாறைகள் என கடல்சார்ந்த பல விஷயங்கள சும்மா வரிசையா அடுக்கி வச்சு இருப்பாங்க. எல்லாத்தையும் வழக்கம்போல நமக்கு தெளிவாக விளக்குவாங்க. இதுமட்டுமில்லாம இங்க இராமர் கல்லுக்கூட இருக்கு. சாதாரணமா ஒரு கல்ல தண்ணீல போட்டா அது மிதக்காது மூழ்கிடும். ஆனா, இராமர்கல்ல தண்ணீல போட்டா மூழ்காது மிதக்கும். இந்த கல்ல வச்சுதான் இராமர் பாலம் கட்டி இலங்கை சென்றாராம்.  அந்த பாலத்திலயிருந்து உடைந்த ஒரு கல்ல இங்க வச்சு இருக்காங்க.

நம்ம கூட இந்த கல்ல தண்ணீல போட்டு ட்ரை பண்ணி பார்க்கலாம். அதுக்கப்புறம் நம்மள தீவுக்குள்ள கூட்டிட்டு போவாங்க. அடடடா….என்ன ஒரு அழகான தீவுத் தெரியுமா? இந்த டிஸ்கவரி சேனல்ல வர பீயர் கிரில்ஸ் மாதிரி நம்மளும் ஒரு காட்டுக்கோ தீவுக்கோ போகனும்னு ஆசைப்பட்டு இருப்போம்ல நம்ம ஆசைக்கு எல்லாம் ஏற்ற இடம் தான் இந்த தீவு. தீவுக்குள்ள போனோம்னா அவ்வளவு மரம் அதுனால நமக்கு ஒரு காட்டுக்குள்ள இருக்கிற மாதிரியே இருக்கும். அப்புறம் தீவுக்கு வெளியே வந்துட்டோம்னா சுத்தி தண்ணீர் கடலுக்கு நடுவுல நிக்கிற மாதிரியிருக்கும். ஒரே கல்லுல இரண்டு மாங்கா.

குருசடை தீவு
குருசடை தீவு

சரி இப்போ நம்ம தீவுக்குள்ள போவோம். பல வகையான அரிய மரங்கள், மூலிகைச் செடிகள்னு பல செடிகொடிகள் இருக்கும். எல்லாமே அடர்ந்து இருக்கும் நம்ம நடந்து போறதுக்கு மட்டும் நடுவுல வசதியா ஒரு பாதை இருக்கும். ஒவ்வொரு மரம் அதோட தன்மை, பயன்கள் பற்றி விளக்கிட்டே நம்மள கூட்டிட்டு போவாங்க. தீவுக்குள்ள ஒரு நாள் ஐந்து பாழடைந்த கட்டிங்கள் இருக்கும். என்னடா இது, மனிதர்களே இல்லாத ஒரு தீவுக்குள்ள எப்டி இந்த கட்டிடம்லா இருக்குனு கேட்டதுக்கு, இதுலா ஆங்கிலேயர்கள் காலத்துல 1850 அப்போ ஆராய்ச்சிக்காக வெள்ளக்காரங்க கட்டியது தான் இந்த கட்டிடங்கள்னு சொன்னாங்க. அது மட்டுமில்லாம உலகத்தோட முதல் கடல் ஆய்வு கூடம் இந்த தீவுல தான் உருவாச்சுனு சொன்னது ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு.

மேலும், இங்க அருங்காட்சியகம் அப்புறம் ஆராய்ச்சியாளர்களா தங்குறதுக்காகவே விருந்தினர் மாளிகையும் ஆங்கிலேயர்கள் கட்டி இருக்காங்க. முக்கியமான விஷயம் என்னனா இது எல்லாத்தையும் பவளப்பாறைகள் வச்சு தான் கட்டி இருக்காங்க. அதுனாலதான் இந்த கடல் தண்ணீர், கடல் காற்றுலையும் கூட இவ்ளோ வருஷமா ஆகியும் இந்த கட்டிடங்கள் இருக்கு. ஆனா எதுவுமே பயன்பாட்டில் இல்ல.

குருசடை தீவு
குருசடை தீவு

அருங்காட்சியகம் உள்ள மட்டும் பதப்படுத்தப்பட்ட பல வகையான உயிரினங்கள் இன்று வர அப்படியே கண்ணாடி பாட்டில்குள்ள இருக்கு. ஒன்னு இல்ல இரண்டு இல்ல இடிந்து போன கட்டிடம் பூராவே பல பாட்டில்கள்ல பல உயிரினங்கள் இன்னும் அப்படியே இருக்கு. இந்த கட்டிடத்த புதுப்பிச்சு அருங்காட்சியத்துக்கு புது உயிர் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்.

 டால்பின் மண்டையோடு, அரிய வகை தாவரங்கள், ஆங்கிலேயர்கள் கட்டிடம், ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் இது எல்லாத்தையும் பார்த்து முடுச்ச அப்புறம் அப்படியே ஜாலியா நம்ம தீவுக்குள்ள உலா வரலாம், போட்டோ எடுக்கலாம், ஆடலாம், பாடலாம், கண்ணாடி மாதிரி இருக்கிற கடல் தண்ணீர்ல குளிக்கலாம். ஆனா குப்பைய மட்டும் போடக் கூடாது.

குருசடை தீவு
குருசடை தீவு

நமக்கு தேவையான தண்ணீர், உணவு இது எல்லாத்தையும் நம்ம தான் கொண்டு போகணும். நமக்கு ஒரு மணி நேரம் டைம் அது வர நம்ம தீவுக்குள்ள இருந்திருக்கலாம். இந்த தீவு நமக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். உங்களுக்கு இயற்கைனா ரொம்ப புடிக்கும்னா கண்டிப்பா இந்த தீவையும் ரொம்ப புடிக்கும்.

 பல பேருக்கு இந்த தீவு பற்றி தெரியாது, கடல்சார் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி பண்றவங்க மற்றும் பொதுமக்களும் கடல்சார் உயிரினங்கள் பற்றி தெருஞ்சுக்கனும்னு தான் இந்த தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கொடுத்தாங்க. இப்போ உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சுல உடனே குருசடை தீவுக்கு கிளம்புங்க...