Published:Updated:

நகரங்களில் வீட்டுத்தோட்டம் இல்லாததால் பறவைகள் அழிகின்றன!

நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

நிகழ்வு

நகரங்களில் வீட்டுத்தோட்டம் இல்லாததால் பறவைகள் அழிகின்றன!

நிகழ்வு

Published:Updated:
நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
நிகழ்வில்

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் கூடுகள் அமைப்பு, பசுமை விகடன், தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி இணைந்து `கூடுகள் வழங்கும் விழா, சிட்டுக்குருவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி’யை நடத்தியது. இந்நிகழ்வில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 350 பேர் கலந்துகொண்டனர்.

கூடுகள்
கூடுகள்

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பறவை ஆர்வலர் பேராசிரியர் முருகவேள், ``சென்னையில் எந்தெந்த இடங்களில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்று நாங்கள் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம். அதில் வடசென்னை பகுதிகளில் அதிகமாகச் சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்தது. காரணம் என்னவென்றால் பழைய மாடலில் இங்கு வீடுகள் உள்ளன. அதனால், சிட்டுக்குருவிகள் வருகை புரிகின்றன. சென்னையின் மற்ற பகுதிகளில் கட்டப்படும் நவீன குடியிருப்புகளில் சிட்டுக்குருவிகள் வந்து கூடு கட்டுவதற்கான அமைப்புகள் இல்லை.

நிகழ்வில்
நிகழ்வில்


சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வீட்டுத்தோட்டங்களில் காணப்பட்ட தவிட்டுக் குருவி, தேன் சிட்டு, தையல் குருவி போன்ற பறவைகள் இன்று அரிதாகிவிட்டன. இதற்குக் காரணம் வீடுகளில் தோட்டங்களும் வளர்ந்த மரங்களும் இல்லை என்பதே. அதேபோன்று பறவைகள் கூடு கட்டும் மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி வருகிறோம். இன்று சென்னையில் அதிகம் காக்காவையும் புறாவையும்தான் பார்க்க முடிகிறது. மற்ற பறவைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது.

அன்புவாணன், முருகவேள், கூடுகள் கணேசன், இளமாறன்.
அன்புவாணன், முருகவேள், கூடுகள் கணேசன், இளமாறன்.

மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவிகள் விதிவிலக்கானவை. அவை மனிதனை அண்டியே வாழ்ந்துவந்தவை. குறிப்பாக, வீடுகளில் உள்ள தாழ்வாரங்கள், முகடுகளில் கூடு கட்டும். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாததால்தான் செயற்கையான கூடுகளை வைக்க வேண்டியது இன்று அவசியமாகிறது” என்றார்.

கூடுகளுடன்
கூடுகளுடன்

கூடுகள் அமைப்பின் நிறுவனர் `கூடுகள்’ கணேசன், ``இதை வீட்டின் சுற்றுப்புறத்தில் வெயில், மழை படாத இடங்களில் ஆணியடித்து மாட்டிவிட்டால் போதும். சிட்டுக்குருவிகள் அங்கே வருகை புரியும். இந்தக் கூடுகளை விலைக்கு வாங்கிதான் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பிளைவுட், காட்டன் பாக்ஸில்கூட எளிமையாகச் செய்துகொள்ளலாம்” என்றார். நிகழ்வில் தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புவாணன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பொது மேலாளர் இளமாறான் ஆகியோர் பேசினர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மரப்பெட்டியால் ஆன கூடுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒருபகுதியாகக் கூடு தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism