Election bannerElection banner
Published:Updated:

முதல்முறையாக ஊட்டிக்குப் படையெடுத்த செந்நாய்கள்... தீவிரமாகக் கண்காணிக்கும் வனத்துறையினர்!

செந்நாய்
செந்நாய்

பைக்காரா பகுதிகளில் ஒரு சில சமயங்களில் செந்நாய்களை காணமுடிகிறது.மார்லிமந்து பகுதியில் இவற்றை பதிவு செய்ததாக எந்த விவரமும் தற்போதைக்கு இல்லை.அப்படி இவை இந்த பகுதிகளுக்கு வரக்காரணம் என்ன என்பதை கள ஆய்வு செய்யவேண்டும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக மார்லிமந்து அணை உள்ளது. வனப்குதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் கரைகளில் கடமான்கள் கூட்டம் கூட்டமாக எலும்புக்கூடுகளாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

sambar deer found dead
sambar deer found dead

வனத்துறையினர் மார்லிமந்து அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் 15-க்கும் அதிகமான கடமான்கள் (Sambar Deer) எலும்புக்கூடுகளாக கிடந்தன. வேட்டை விலங்குகள்தான் இவற்றை வேட்டையாடியிருக்ககூடும் என்பதை உறுதி செய்த வனத்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ``முதல் முறையாக இந்த பகுதிக்கு செந்நாய்கள்‌ (Indian wild dogs) வந்துள்ளன. அவை‌ கூட்டம் கூட்டமாக உலவுகின்றன. இங்கு வழக்கமாக நீர் அருந்த வரும் கடமான்களை தண்ணீரில் வைத்தே வேட்டையாடுகின்றன. இதற்கு முன்பு இந்த பகுதிக்கு செந்நாய்கள் வந்ததேயில்லை" என தெரிவித்துள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த பலரிடமும் விசாரணை மேற்கொண்டும், கடமான்களின் உடல் பாகங்கள் உண்ணப்பட்டிருக்கும் விதத்தை வைத்ததும் வேட்டையாடியது செந்நாய்கள்தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து நீலகிரி வனக்கோட்டத்தின் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், ``மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிறுத்தைகள், கடமான்கள் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஆனால் இந்த வனத்தில் செந்நாய்கள் இல்லை. தலைக்குந்தா அல்லது முதுமலை வனப்பகுதிகளில் இருந்து இவை இடம்பெயர்ந்து வந்திருக்கவே வாய்ப்புகள் ‌அதிகம். வன விலங்கு ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்.இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

sambar deer found dead
sambar deer found dead

ஊட்டியில் செந்நாய்கள் நடமாட்டம் குறித்து காட்டுயிர் புகைப்பட கலைஞர்கள் சிலரிடம் பேசினோம். ``நீலகிரி மாவட்டத்தில் முதுமலை கூடலூர், கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் செந்நாய்கள் காணப்படுகின்றன. அதே போல பைக்காரா பகுதிகளில் ஒரு சில சமயங்களில் காணமுடிகிறது.மார்லிமந்து பகுதியில் இவற்றை பதிவு செய்ததாக எந்த விவரமும் தற்போதைக்கு இல்லை.அப்படி இவை இந்த பகுதிகளுக்கு வரக்காரணம் என்ன என்பதை கள ஆய்வு செய்யவேண்டும்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு