Published:Updated:

முதுமலையில் அதிகரிக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்; பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்குமா வனத்துறை?

பிணந்தின்னிக் கழுகுகள்

``இவற்றின் கூடுகள் இருக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் பரப்பளவை பிணந்தின்னிக் கழுகுகளின் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அழிவிலிருந்தும் பாதுகாக்க முடியும்."

முதுமலையில் அதிகரிக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்; பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்குமா வனத்துறை?

``இவற்றின் கூடுகள் இருக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் பரப்பளவை பிணந்தின்னிக் கழுகுகளின் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அழிவிலிருந்தும் பாதுகாக்க முடியும்."

Published:Updated:
பிணந்தின்னிக் கழுகுகள்

கொள்ளை நோய்களில் இருந்து காடுகளைக் காக்கும் காவலனாக ஆய்வாளர்களால் அறியப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையினமாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் 9 வகையான பிணந்தின்னிக் கழுகுகளில் வெண்முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் ஆகிய இந்த 4 வகையான பிணந்தின்னிக் கழுகுகள் தென்னிந்தியக் காடுகளை வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன.

பிணந்தின்னிக் கழுகு
பிணந்தின்னிக் கழுகு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிணந்தின்னிக் கழுகுகளின் கடைசிப் புகலிடமாக அறியப்படும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திலேயே இவற்றின் எண்ணிக்கை ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே தற்போது இருப்பதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசும், தொண்டு நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெண்முதுகு உள்ளிட்ட ஒருசில பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை மெள்ள அதிகரித்து வருவதையும் ஆய்வுகள் மூலம் கண்டறிந்து நம்பிக்கை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டமாகத் தென்படுகின்றன. இது ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆய்வாளர் மணிகண்டன்
ஆய்வாளர் மணிகண்டன்

பிணந்தின்னிகள் குறித்து கள ஆய்வில் ஈடுபட்டு வரும் இளம் ஆய்வாளர் மணிகண்டன் நம்மிடம் பேசுகையில், ``முதுமலையில் சமீபத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையில்

வெண்முதுகு - 110 ,

கருங்கழுத்து - 11,

செந்தலை - 5,

மஞ்சள் முகம் - 2

இருப்பதை உறுதி செய்துள்ளனர். 2021-22 இனப்பெருக்கக் காலத்தில் 14 வெண்முதுகு பிணந்தின்னிக் குஞ்சுகளும், 4 கருங்கழுத்து பிணந்தின்னிக் குஞ்சுகளும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இனப்பெருக்கக் காலம் முடிந்துவிட்டதால், குஞ்சுகள் சிறகடிக்க ஆரம்பித்துள்ளன. முதுமலையில் போதுமான இரையும் தற்போது கிடைத்து வருவதால் 40, 50 எனக் கூட்டமாக இவற்றைப் பார்க்க முடிகிறது. இவற்றின் கூடுகள் இருக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் பரப்பளவை பிணந்தின்னி பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அழிவிலிருந்தும் பாதுகாக்க முடியும். இப்படி அறிவித்தால் கழுகுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களின் பயன்பாடு குறையும், அதற்கான தடையும் விதிக்க முடியும்" என்றார் நம்பிக்கையுடன்.

பிணந்தின்னிக் கழுகுகள்
பிணந்தின்னிக் கழுகுகள்

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் நீலகிரி மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ், ``புலிகள் காப்பகமாக இருப்பதால் கழுகுகளுக்கும் பாதுகாப்பான பகுதியாகவே இருக்கிறது. கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism