Published:Updated:

பிங்க் நிறமாக மாறிய வானம்... ஜப்பான் மக்கள் அச்சம்! #PrayforJapan

பார்க்க அழகாக இருந்தாலும் இதற்குபின் பெரும் ஆபத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது!

#PrayforJapan
#PrayforJapan

சூறாவளி வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வானம் நிறம் மாறி உள்ளதால் ஜப்பானியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

#PrayforJapan
#PrayforJapan

ஜப்பானில் இதற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு இதே போன்றே வானம் பிங்க் நிறத்தில் மாறியதாகவும், அப்போது உருவான சூறாவளியில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர் மற்றும் பல்வேறு அழிவுகள் ஏற்பட்டதாகவும் தற்போது அது போன்ற சூறாவளி உருவாகுமோ என்றும் மக்கள் அச்சத்தில் உள்ளதாக ஜப்பானில் வசிக்கும் மக்கள் சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ஹசியோஜிமா தீவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் அபாயகரமான சூறாவளிப் புயல் ஒன்று நிலை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூறாவளி கரையைக் கடக்கும் போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் 16 லட்சம் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ரயில், விமானம் சேவை முடக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி சூறாவளியால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. சென்ற மாதம் கூட மிக பெரிய சூறாவளி ஒன்று ஜப்பானை தாக்கியது. அப்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு சூறாவளியா என்று ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஜப்பான் மக்கள்நிலை கருதி பிராத்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #PrayforJapan ஹேஷ்டேக் இந்திய அளவிலும் டிரெண்ட் ஆகி வருகிறது.