Published:Updated:

‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!

வனச்சோலைக்குள் ஜஸ்வந்த் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
வனச்சோலைக்குள் ஜஸ்வந்த் சிங்

வீட்டுத்தோட்டம்

மிழ்நாட்டில் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது பரவலாகி வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சிறிய இடங்களில் தோட்டம் அமைத்துவருகிறார்கள் நகரவாசிகள். அந்த வரிசையில் சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப் பட்டுள்ள வீட்டுத்தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. காடுபோல வீட்டுக்குள் இருந்த அந்த வனத்துக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், வனத்தின் உரிமையாளர் ஜஸ்வந்த் சிங்.

வீட்டுத்தோட்டத்தில் மரங்கள் வளர்ப்பு
வீட்டுத்தோட்டத்தில் மரங்கள் வளர்ப்பு

“எனக்குப் பூர்வீகம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். 1937-ம் ஆண்டில் என்னுடைய தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறி விட்டோம். கட்டுமான தொழிலைத்தான் பரம்பரையாகச் செய்து வருகிறோம். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!

1978-ம் ஆண்டிலிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன் பூக்கள் மற்றும் துளசிச் செடியுடன் ஆரம்பிச்ச இந்தத் தோட்டம், இன்னைக்கு மரங்கள், மூலிகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மலர் வகைகள் என வனம்போலக் காட்சியளிக்குது’’ என்று முன்னுரை கொடுத்த ஜஸ்வந்த் சிங், தனது தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வனச்சோலைக்குள் ஜஸ்வந்த் சிங்
வனச்சோலைக்குள் ஜஸ்வந்த் சிங்

‘‘இது மொத்தம் ஐந்தாயிரம் சதுரஅடி இடம். இங்கு முன்னூறுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பூச்செடிகள், காய்கறிச் செடிகள், பழமரச்செடிகள், ராசி நட்சத்திர செடிகள், வில்வம், ருத்ராட்சம், சந்தனம், செம்மரம்னு இருக்குது.

‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!

இதோடு வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரந்தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை, பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழைனு மூலிகைகளைத் தொட்டிகள்ல வளர்த்துட்டு வர்றேன். உடல்ல பல குறைபாடுகளைப் போக்கும் திறன் வாய்ந்த மூலிகைகள் எல்லாம் என் தோட்டத்துல வளருது. சந்தன மரங்களுக்குக் கீழே, சிறிய பானைகள்ல துளையிட்டு சிட்டுக்குருவிகளுக்கும், சின்ன பறவைகளுக்கும் இடம் அமைச்சிருக்கேன்” என்றவர் ராசிகளுக்கான தாவரங்கள் குறித்துப் பேசினார்.

பயோ கேஸ் தயாரிப்பு
பயோ கேஸ் தயாரிப்பு

“ஆரம்ப காலங்கள்ல ராசி, நட்சத்திரத்துல எனக்குப் பெரியளவு ஈடுபாடு இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்மூலமா ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்துக்கும் ஏத்தச் செடிகள் என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதன்பிறகுதான் எல்லா ராசி, நட்சத்திரங்களுக்கும் ஏத்த செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். ராசி செடிகளுக்கு அருகிலேயே அழகிய போன்சாய் மரங்களையும் வெச்சிருக்கேன். ஆலமரம், அரசமர வகைகள்ல போன்சாய் மரங்களை வெச்சிருக்கேன்” என்ற ஜஸ்வந்த் சிங், மாடியில் இருந்த காய்கறித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

ராசி மற்றும் நட்சத்திர செடிகள்
ராசி மற்றும் நட்சத்திர செடிகள்

“தக்காளி, வெண்டை, பீன்ஸ், ஐந்து வகைக் கத்திரி, முருங்கை, பாகற்காய், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, நான்கு வகைப் பச்சை மிளகாய் எனப் பலவிதமான காய்கறிச் செடிகள வளர்க்கிறோம். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் இதுமூலமா கிடைச்சிடுது. பின்புறமுள்ள மாடியில், மூன்று வகையான எலுமிச்சை ரகங்கள், நெல்லி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரீச்சை, அத்தி, ஆரஞ்சுனு பழமரங்கள் இருக்கு’’ என்றவர் அதையும் நமக்குக் காட்டினார்.

மரத்தில் தங்கும் அறை
மரத்தில் தங்கும் அறை

‘‘பழமரங்கள்ல மூன்று தேனீப் பெட்டிகள் வெச்சிருக்கோம். வீட்டோட மாடியில சோலார் பேனல்கள் அமைச்சு வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் எடுத்துக்கிறேன். வீட்டுத் தோட்ட செடிகளுக்கும் ஸ்பிரிங்க்ளர் மூலமா தண்ணி கொடுக்கிறேன்.

 காய்கறிச் செடிகள், வீட்டுத்தோட்ட நுழைவுவாயில்
காய்கறிச் செடிகள், வீட்டுத்தோட்ட நுழைவுவாயில்

என் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஏ.சிகளிலிருந்து கிடைக்கிற தண்ணியை பி.வி.சி குழாய்கள்மூலம் சேகரிச்சு வீட்டுத் தேவைக்கும், செடிகளுக்கும் பயன்படுத்திக்கிறேன். இந்த ஏ.சி தண்ணீர் ஒரு நாளைக்கு 100 லிட்டர் வரை கிடைக்குது. சென்னையில கடுமையான வறட்சி இருந்தபோதும் என் தோட்டத்துல எந்தப் பாதிப்பும் இல்ல. வருஷம் முழுசும் பச்சைப்பசேல்னு இருந்தது. கடந்த 35 வருஷ உழைப்போட பலன் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேனீப் பெட்டி, நீர் ஆரஞ்சு பழங்கள்
தேனீப் பெட்டி, நீர் ஆரஞ்சு பழங்கள்

என் வீட்டிலேயே பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, இஞ்சி-பூண்டு கரைசல்னு தயார் செய்யறேன். என்கிட்ட மாடுகள் இல்லை. அதனால, சாணம், மாட்டுச் சிறுநீர் அனைத்தையும் வெளியில் வாங்கித்தான் பஞ்சகவ்யாவையெல்லாம் தயார் செய்யறேன். செடிகள்ல நோய் தாக்கப்பட்டா பூச்சிவிரட்டியைத் தெளிப்பேன். இந்தக் கரைசலை 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிச்சி விடுறேன். ஒவ்வொரு செடிக்கும் அஞ்சு நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுத்திடுவேன். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயைச் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைச்சு, சாறு எடுத்துச் செடிகளுக்குத் தெளிக்கலாம். தவிர மாட்டு எருவையும் அவ்வப்போது கொடுப்பேன். இதிலேயே செடிகள் செழித்து வளரும். வீட்டுக்கு இயற்கை எரிவாயுக் கொள்கலன்(பயோ கேஸ் பிளான்ட்) அமைச்சிருக்கேன். அதுல கிடைக்கிற கழிவையும் இயற்கை உரமா பயன்படுத்திக்குவேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்கு விளக்குப் பொறிகளையும் வெச்சிருக்கேன்.

என்னுடைய தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறிவிட்டோம். மா மரத்தில், தொங்கும் அறை அமைச்சிருக்கேன். ஓய்வு நேரங்களில் இந்த அறையிலதான் தங்குவேன்.

கட்டுமான தொழில்ல இருக்கிறதால, மரத்தாலான அறை ஒன்றைக் கட்ட வேண்டும் என நினைச்சேன். அதனால, என் வீட்டுல இருக்கிற மாமரத்துல, தொங்கும் அறை அமைச்சிருக்கேன். ஓய்வு நேரங்கள்ல இந்த அறையிலதான் தங்குவேன். பெரும் சிரமங்களுக்கிடையே இந்த மர அறையை அமைச்சேன். இதே அறையை நிலத்துல அமைச்சா 10 அடி இடம் தேவைப்பட்டிருக்கும். இத அமைச்சு ஆறு வருடங்களாகிறது. கடந்த வர்தா புயல்ல பெரிய மரங்களே விழுந்தன. ஆனா, என்னுடைய இந்த மர அறை விழவில்லை. அந்த அளவுக்கு உறுதியான கட்டுமானத்தால் அமைச்சிருக்கேன்” என்றவர் நிறைவாக,

‘‘என் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஏ.சிகளிலிருந்து கிடைக்கிற தண்ணியை பி.வி.சி குழாய்கள்மூலம் சேகரிச்சு வீட்டுத் தேவைக்கும், செடிகளுக்கும் பயன்படுத்திக்கிறேன்.’’

“இங்கு விளையும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் எல்லாத்தையும் எங்க தேவை போக நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுக்கிறோம். இங்கு விளையும் காய்கறிகளை நாங்கள் உண்பதோடு நண்பர்களுக்கும் கொடுக்கிறதில மகிழ்ச்சிதான். நாங்க காய்கறிகளை வெளியில் வாங்குறதேயில்லை. இதனால, காய்கறிகளுக்கான செலவும் மிச்சமாகிறது. அதைவிடச் சுவையான பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுறது மனநிறைவைத் தருது. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில இயற்கையோடு இணைஞ்சு வாழ வேண்டும். அப்போதான் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அவசர சிகிச்சைகளைத் தவிர, சாதாரணக் காய்ச்சல், தலைவலியென எதற்கும் மருத்துவமனைக்குப் போனது கிடையாது” என்றார்.

பசுமை நிறைந்த வனத்தைப் பிரிந்து செல்ல மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.

தொடர்புக்கு, ஜஸ்வந்த் சிங், செல்போன்: 98400 45621

ஜஸ்வந்த் சிங்கின் வீட்டுத்தோட்டம் பற்றிய காணொளி...

வீட்டைவிட மரங்களின் மதிப்பு அதிகம்!

“என்கிட்ட இருக்கிற தோட்டத்துல மொத்தம் 200 சந்தன மரங்களும், 100 செம்மரங்களும், பர்னிச்சர் செய்ய பயன்படும் பிற மரங்களும் இருக்கின்றன. இந்த மரங்களை கடந்த 10 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுற்றிலும் பசுமையாக வைத்திருக்க நட்டு வைத்தேன். இன்னும் சில வருடங்கள் கழித்து இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால், இப்போது நான் குடியிருக்கும் இடத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும்” என்கிறார் ஜஸ்வந்த் சிங்.