Published:Updated:

ஆகாயத் தாமரையில் புடவை தயாரிப்பு; ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முயற்சி!

ஆகாயத் தாமரை ( Pixabay )

ஆகாயத் தாமரைகள் பொதுவாக கழிவு நீர் கலக்கும் நீர்நிலைகளில்தான் வேகமாகப் பரவி வளரும். சுத்தமான நீரில் வளர்வதில்லை. மிக கனமான, பசுமையான இலைகளைக் கொண்ட ஆகாயத் தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

ஆகாயத் தாமரையில் புடவை தயாரிப்பு; ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முயற்சி!

ஆகாயத் தாமரைகள் பொதுவாக கழிவு நீர் கலக்கும் நீர்நிலைகளில்தான் வேகமாகப் பரவி வளரும். சுத்தமான நீரில் வளர்வதில்லை. மிக கனமான, பசுமையான இலைகளைக் கொண்ட ஆகாயத் தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

Published:Updated:
ஆகாயத் தாமரை ( Pixabay )

குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் அழகைப் பராமரிப்பதற்காக தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட தாவரம் ஆகாயத் தாமரை. இந்தத் தாவரத்தை நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் உட்கொள்ளாது என்பதால் நீர்நிலைகளில் அதிகமாகப் பரவி அதன் தன்மையை அழித்து விடுகிறது.

ஆகாயத் தாமரை ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தாவரம். இந்தச் செடிகள் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டவை. தண்ணீரில் மிதக்கும் இந்தத் தாவரத்தின் வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலமாக, தொடர்ந்து நீர் நிலைகளில் முழுவதுமாக விரைந்து பரவிவிடும்.

நீர் நிலையில் ஆகாயத் தாமரை
நீர் நிலையில் ஆகாயத் தாமரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனைத் தடுக்கும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆகாயத் தாமரைகளைப் பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் புதிய உத்தியை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வச்சதா புகாரே மற்றும் நேச்சர் கிராஃப்ட் என்ற இரண்டு நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆகாயத் தாமரைகள் பொதுவாக கழிவு நீர் கலக்கும் நீர்நிலைகளில்தான் வேகமாகப் பரவி வளரும். சுத்தமான நீரில் வளர்வதில்லை. மிக கனமான, பசுமையான இலைகளைக் கொண்ட ஆகாயத் தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இவை விவசாயத்துக்கும் ஊறுவிளைவிக்கும் தாவரங்கள். இவற்றைக் கட்டுப்படுத்த வேதியியல் முறையைப் பயன்படுத்த வேண்டுமென அம்மாநில பொதுப்பணித் துறையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு புதிய முயற்சியைக் கையாண்டிருக்கின்றன இந்நிறுவனங்கள்.

புடவை
புடவை
Image by Deankez from Pixabay

ஆகாயத் தாமரை நாரிலிருந்து உருவாக்கப்படும் நூலை பருத்தியுடன் சேர்த்து ஆடை தயாரிப்பில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்வச்சதா புகாரே நிறுவனத்தின் இயக்குநர் கௌரவ் ஆனந்த் கூறுகையில், ``சணலில் இருந்து நூல் பிரித்தெடுக்கப்படுவது போலவே ஆகாயத் தாமரையில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் நூலைப் பயன்படுத்தி முதலில் ஆயிரம் புடவைகளை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம்.

ஜூன், ஜூலை மாதத்தில் இந்தத் தயாரிப்புகள் சந்தையில் விற்பனைக்கு வரும். இதற்காக மேற்கு வங்கத்திலுள்ள பயன்படுத்தப்படாத 30-40 குளங்களிலிருந்து ஆகாயத் தாமரையைச் சேகரிப்பதற்கு 200 பெண்களை வேலைக்கு நியமித்துள்ளோம். இதனால் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, நீர்நிலைகளும் சுத்தப்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலவாகும்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism