Published:Updated:

187 வயது ஆமையின் 1886-ம் ஆண்டுப் புகைப்படம்...

1886 -ம் ஆண்டு தனது 54 -ம் வயதில் ஜொநாதனின் புகைப்படம் எடுக்கப்பட்டது. சமீபத்தில் அதன் 187 -வது வயதில் எடுத்த புகைப்படமும் அதனுடன் சேர்ந்து வைரல் ஆகி வருகிறது.

ஜொநாதன்
ஜொநாதன் ( Justsomething.co )

பல உயிரினங்கள் மனிதர்களின் வாழ்நாளைவிட அதிகமான ஆண்டுகள் வாழ்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம். அதற்குச் சிறந்த உதாரணமாக எப்போதுமே நிற்பது ஆமைகள்தான். அத்தகைய ஆமை ஒன்றின் வயது விரைவில் 187 ஆண்டுகளை விழுங்கக் காத்திருக்கிறது.

ஜொநாதன்
ஜொநாதன்
Justsomething.co

ஜொநாதன் (Jonathan) என்ற பெயருடைய அந்த ஆமை அல்டாபிரா (Aldabra) வகையைச் சேர்ந்த பெரிய ஆமை வகை. இதுதான் நிலவாழ் ஆமைகளிலேயே மிகப் பெரிதாக வளரக்கூடிய வகை. அதிலும் ஜொநாதன்தான், உலகில் வாழும் நிலவாழ் உயிரினங்களிலேயே அதிக ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினம்.

ஜொநாதன், தற்போது சிசெல்ஸில் (Seychelles), செயின்ட் ஹெலெனா என்ற தீவில் ஆளுநருடன் பிளான்டேஷன் ஹௌஸில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. 1832-ம் ஆண்டு பிறந்த ஜொநாதன், 1886-ம் ஆண்டு ஒருமுறை புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தோடு, தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட அதன் படம் ஒன்றோடு சேர்த்து #187yearschallenge என்று இரண்டையும் ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் வெளியான ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் ஜொநாதன்
குழந்தைகளுடன் ஜொநாதன்
Justsomething.co

1886-ல் புகைப்படம் எடுக்கையில் ஜொநாதனுக்கு 54 வயது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய படத்தில் காணப்படுவதும் அதே ஆமைதான். இன்று அதன் வயது 187 அதுமட்டுமல்லாமல், அது இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படம் வைரலாகிக் கொண்டிருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம். 

Vikatan

ஜொநாதன் இன்றும் ஆரோகியமாக இருந்தாலும், வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளும் தோன்றாமலில்லை. அதன் கண் பார்வையும் நுகர்திறனும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூர்மையிழந்து கொண்டிருக்கின்றன.

இதைச் சமன்செய்ய, அதிகமான கலோரிக்கள் நிறைந்த உணவை மருத்துவர் ஹோலின்ஸ் அதற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஜொநாதன் இப்போதெல்லாம் புற்களைச் சாப்பிடுவதில்லை. மருத்துவர் ஹோலின்ஸ் கொடுக்கும் உணவு மட்டும்தான்.

தன் 187-வது வயதில் போதுமான மருத்துவ உதவிகளோடு இன்றளவும் ஆரோக்கியமாக வாழும் ஜொநாதன் என்ற ஆமைக்கு நம் வாழ்த்துகள்.