Published:Updated:

``மரங்களோடு பேசுங்கள்; நிறைய பூக்கும், காய்க்கும்!"- மரம் நடும் விழாவில் இயற்கை ஆர்வலர்

மரக்கன்று நடும் பணி
மரக்கன்று நடும் பணி

``ஒரு செடிக்கு அடுத்து என்ன செடி வைக்க வேண்டும். எவ்வளவு இடைவெளி வேண்டும் என்பதை அறிந்து நட்டால், கானகம் மலரும்.''

கரூரில் 47 வகைகளில் 2,000 மரங்களை நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதின் மகத்துவத்தைப் பற்றி சிலாகித்து, உணர்வுபூர்வமாக பேசியது, ரசிக்கும்படியாக இருந்தது.

மரக்கன்று நடும் பணி
மரக்கன்று நடும் பணி

கரூரில் இயங்கி வரும் ஆரா இன்டர்நேஷனல் நிறுவன உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தி, `ஆராபசுமை கானகம்' என்ற திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக இடிதாங்கி, கொன்றை, மகிழம், வேங்கை, காயா மகாகனி, புன்னை, செண்பகம், அர்ஜென்டினா, நீர் மருது உள்ளிட்ட 47 வகைகளான 2,000 மரக்கன்றுகள் நடும்பணியை, தனது வணிக நிறுவன வளாகங்களில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை நிறுவனத் தலைவர் மேலை பழநியப்பன், மோனிகா கார்த்தி உள்ளிட்டவர்களும் பணியாளர்களும் திரளாக பங்குபெற்றனர்.

Vikatan

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டபின் பேசிய, நம்மாழ்வாரிடம் பயின்றவரும் பசுமை ஆர்வலரும், பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான மரங்களை நடும் சேவையாளருமான அக்ரி அருணாசலம்,

மரக்கன்றோடு அக்ரி அருணாசலம்
மரக்கன்றோடு அக்ரி அருணாசலம்

``நாம் பயன்படுத்தும் ஏ.சி, கார் உள்ளிட்ட வஸ்துகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பின் கைம்மாறாக நமது மக்களுக்கான இயற்கை நலனை இந்த மரங்கள் ஏற்படுத்தும். ஒரு மரம் காய்க்கவோ, ஒரு செடி பூக்கவோ இல்லையெனில், அந்த மரத்தோடு; செடியொடு மானசீகமாகப் பேசுங்கள். அதன்பலனாக, கண்டிப்பாக அந்தச் செடி, மரம் பூக்கும்; காய்க்கும்; மரங்களும் இனச் சேர்க்கை செய்கின்றன. ஒரு செடிக்கு அடுத்து என்ன செடி வைக்க வேண்டும், எவ்வளவு இடைவெளி வேண்டும் என்பதை அறிந்து நட்டால், கானகம் மலரும். தட்டை பட்டாம்பூச்சிகள், குருவிகள், கிளிகள் தங்க ஆரம்பிக்கும். அதன் காரணமாக, இயற்கை எழில் கொஞ்சி, நல்ல காற்று கிடைக்கும். நம்மால் அழிக்கப்பட்ட இயற்கை மெள்ள மெள்ள மீண்டெழும்" என்றார்.

பின் செல்ல