Election bannerElection banner
Published:Updated:

வேதாரண்யம்: சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய ஆமை... மீட்டு கடலில் சேர்த்த வனத்துறையினர்!

ஆமை
ஆமை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட வருவது வழக்கம்.

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடியது. சுமார் 100 கிலோ எடையுடைய அந்த ஆமையைக் கருணை உள்ளத்துடன் மீட்டு, படகு மூலம் கடலில் கொண்டுவிட்ட வனத்துறையினரின் செயல்பாடு அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

ஆமை
ஆமை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரியவகை இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட வருவது வழக்கம்.

அதேபோல் நேற்று நடுக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 வயது மதிக்கதக்க 100 கிலோ எடை கொண்ட ஆலிவ்ரெட்லி ஆமை ஒன்று கோடியக்கரை கடற்கரைக்கு முட்டையிட வந்துள்ளது. கோடியக்கரையில் புதைமணல் சேறு பகுதி உள்ளது.  கடற்கரையிலுள்ள  புதைமணல் சேற்றுப் பகுதிக்கு வந்த ஆமை அதில்  சிக்கி உயிருக்குப் போராடியது.

இச்செய்தி அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் ஆலிவ்ரெட்லி ஆமையை சேற்றிலிருந்து மீட்டு பிளாஸ்டிக் மிதவையில் வைத்து சிறிது தூரம் கடலில் கொண்டுபோய் விட்டனர். ஆனால், அந்த ஆமை மீண்டும் கடற்கரைக்கு வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  வனத்துறையினர்  ஆமையைப்  பாதுகாப்புடன்  ஒரு படகில் ஏற்றி 1 கிலோ மீட்டர் தூரம் கடந்து கடலில் கொண்டுபோய் விட்டனர்.

ஆமை
ஆமை

ஆமை உயிருடன்  கடலில் நீந்தி சென்று விட்டது. கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையிலான  வனத்துறையினர் மிகுந்த சிரமத்துக்கு இடையில் ஆமையை  படகில் கொண்டு போய் உயிரைக்  காப்பாற்றிய  செயல் மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு