Published:Updated:

கொள்ளிடம்: 6 கிராம பறவைகளின் தாகம் தீர்க்க இளைஞர்களின் அசத்தல் முயற்சி!

பறவை

கடல்நீர் ஆற்றில் உட்புகுந்து போனதால் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி வசிக்கும் பறவைகளுக்கு தகர டின்களில் தினம்தோறும் நல்ல தண்ணீர் ஊற்றி உதவும் இளைஞர்களின் செயல்பாடு பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு, சரஸ்வதிவளாகம், கொன்னகாட்டுபடுகை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

பறவை
பறவை

கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டியுள்ள இக்கிராமங்களில் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வனத்துறைக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்கள் மற்றும் வனப்பகுதியில் மயில், காகம் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் உள்ளன. தற்போது கோடைக்காலமாக உள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் பறவைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைக் கருத்தில் கொண்டு கொள்ளிடம் பகுதியில் `உதவும் கரங்கள்' என்ற அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் தகர டின்களை எடுத்து அதில் தண்ணீர் தேக்கி வைக்கும் படியான நிலையை ஏற்படுத்தி மரங்களில் கட்டி தொங்கவிட்டு பறவைகளுக்காகத் தினம்தோறும் தண்ணீர் அளித்து வருகின்றனர்.

பறவை
பறவை

இதுகுறித்து உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜவேல் கூறுகையில், ``கடும் கோடை வெயில் நிலவும் சூழ்நிலையில் பறவைகளுக்கு தற்போது தண்ணீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதனால் பறவைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. எனவே, பறவைகளின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் கடைகளில் பயனுள்ள பெரிய தகர டின்களை வாங்கி அதில் தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் செய்துள்ளோம்.

அதை 6 கிராமங்களில் உள்ள மரங்களில் கட்டித் தொங்க வைத்து அதில் தினம்தோறும் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்கு அளித்து வருகிறோம் "என்றார். பறவைகளுக்குத் தண்ணீர் அளித்துவரும் இந்த இளைஞர்களின் சேவையை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.