Published:Updated:

`இறைச்சியில் விஷம்.. சுருக்குக் கம்பி வலை!' -சிறுத்தைகளின் கொலைக்களமாகும் கோத்தகிரி

leopard death
leopard death

உணவு, தண்ணீர் தேடி விளைநிலங்களுக்குள் வரும் காட்டுயிர்களை குறிவைத்து வேட்டையாடுவதும், விஷம் வைத்துக் கொல்லப்படுவதுமான வனக்குற்றங்கள் நீலகிரியில் பரவலாக நடக்கின்றன.

பெரும்பாலும் சோலைக் காடுகளும் புல்வெளிகளுமாகக் காணப்படும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது தேயிலை, காபி உள்ளிட்ட பணப்பயிர்கள் மலைக்காய்கறித் தோட்டங்கள், சொகுசு விடுதிகள் அதிக அளவில் உள்ளன.

leoprd death
leoprd death

காட்டை இழந்து தவிக்கும் ஏராளமான காட்டுயிர்கள் தேயிலைத் தோட்டங்களிலும் விளைநிலங்களையொட்டிய பகுதிகளிலும் தஞ்சம் புகுந்துள்ளன.

உணவு, தண்ணீர் தேடி விளை நிலங்களுக்குள் வரும் காட்டுயிர்களை குறிவைத்து வேட்டையாடுவதும், விஷம் வைத்துக் கொல்லப்படுவதுமான வனக்குற்றங்கள் நீலகிரியில் பரவலாக நடக்கின்றன.

leopard death
leopard death

அதிலும் குறிப்பாக கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, குரங்கு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்படுவதும், சுருக்குக் கம்பிகள் வைத்துக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது.

கடையம் காட்டுக்குள் கொல்லப்பட்ட சிறுத்தை! - விஷம் வைத்த வேட்டைக்காரர்கள்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதேபோல் கோத்தகிரியில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று பலியானது. கடந்த மாதம் கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கோத்தகிரி வனச்சரகத்தில் 3 வயதுள்ள ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

Black panther death
Black panther death

தொடர்ந்து வனவிலங்குகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டும், அதுகுறித்து உரிய விசாரணை இல்லாமல் போவதும் தொடர்கதையாகி வருவதால், இந்தச் சட்டவிரோத வனக்குற்றத்தில் பலரும் ஈடுபடுவதாகக் காட்டுயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிறுத்தைகளின் தொடர் மரணம் குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் ஜனார்த்தனன், ``மான், முயல் போன்றவை இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டாலும் கரடி, சிறுத்தை, புலி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் மேல் உள்ள அச்சத்தாலும் இவற்றை அழிக்க வேண்டும் என்பதாலும் இறைச்சி, பழம் போன்றவற்றில் விஷம் வைத்துக் கொல்லப்படுகின்றன. அதேபோல் சுருக்குக் கம்பிகள் வைத்தும் கொல்லப்படுகின்றன. கடந்த மாதம் கோத்தகிரியில் சுருக்குக் கம்பியில் சிக்கிய புலி ஒன்று காயத்துடன் தப்பிச் சென்றது.

leopard death
leopard death

காடுகளையொட்டிய பகுதியிலும் விளை நிலங்களிலும் வனவிலங்குகள் வருவதால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சப்படுவார்கள் என இவற்றைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து இதுபோன்று செயலில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு விலங்கின் மரணத்திற்கும் முறையான பிரேதப் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தாலே பல விஷயங்கள் வெளியில் வரும்" எனக் கொதிக்கிறார்.

வன விலங்குகளின் மர்ம மரணம் குறித்து நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இறந்த விலங்குகள் முறையான உடற்கூறாய்வு செய்யப்படுகின்றன. தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு