Election bannerElection banner
Published:Updated:

`தேர்தலுக்குப் பின் இந்த 3 விஷயங்களில் நீதிமன்றம் கவனம் செலுத்தும்!' - தலைமை நீதிபதி சொன்னது என்ன?

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

``உலக வெப்பமயமாதல் நேரத்தில் நிச்சயமாக சூழலியல் பாதுகாப்பு அவசியம். இதைத்தான் நாங்கள் பலமுறை சொல்லிக்கொண்டே வருகிறோம்."

``தேர்தலுக்குப் பின்னால் இந்த நீதிமன்றம் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும்" எனச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தெரிவித்திருக்கிறார். முதலாவதாக நீர்நிலைகளில் நிகழும் அத்துமீறலைத் தடுத்தல், இரண்டாவதாகத் திடக்கழிவு நிர்வாகத்தை மேம்படுத்துதல், மூன்றாவதாக கடல், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவதை முற்றிலுமாகத் தடை செய்தல் என மூன்று விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றுதான். இப்போதாவது நீர் நிலைகள் குறித்து எல்லோருக்கும் அக்கறை வருவது நல்லது. அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளாக சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களைச் செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளன. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்துத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு, சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சூழலியல் சார்ந்து கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டிய பல்வேறு கோரிக்கைகளை சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021-ஐ தயார் செய்து தமிழ்நாட்டின் அநேக கட்சிகளுக்குப் பூவுலகின் நண்பர்கள் குழு வழங்கியிருந்தது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. நான்கு கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் அறிக்கையில் சுற்றுச்சூழல் குறித்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருந்து விடக்கூடாது.

பொறியாளர் சுந்தர்ராஜன்
பொறியாளர் சுந்தர்ராஜன்

உலக வெப்பமயமாதல் நேரத்தில் நிச்சயமாக சூழலியல் பாதுகாப்பு அவசியம். இதைத்தான் நாங்கள் பலமுறை சொல்லிக் கொண்டே வருகிறோம். நீதிமன்றம் இதை சொல் அளவில் நிறுத்திவிடாமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும். நீர் நிலைகள் தவிர, சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் திட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை வலசை பாதை ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் நீதிமன்றம் கவனம் செலுத்த முன்வந்தால் முழுமையான சூழலியல் முழுமையாகப் பாதுகாக்கப்படும். அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை மீறி நீதிமன்றம் நிறைவேற்றினால் நல்லதுதான்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு