Published:Updated:

`புலியைச் சுட்டுக்கொல்ல மாட்டோம்'- பின்வாங்கிய கர்நாடக வனத்துறை!

6 கும்கி யானைகள், 6 கால்நடை மருத்துவக் குழுக்கள் எனக் கூட்டாக இணைந்து பந்திப்பூரில் ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

48 மணி நேரத்துக்குள் ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிப்போம் எனக் களமிறங்கிய கர்நாடக வனத்துறை மீது, பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் நிலைப்பாட்டை மாற்றி புலியை உயிருடன் பிடிக்க முனைப்பு காட்டிவருகிறது.

man eater tiger combing operation
man eater tiger combing operation

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய சவுதஹள்ளி கிராமத்தில் கடந்த இரண்டு மாதத்தில் சிவமாதன் மற்றும் சிவலிங்கப்பா ஆகிய இரண்டுபேர் புலிதாக்கி இறந்தனர். மேலும், இதே பகுதியில் மூன்று மாடுகளையும் புலி வேட்டையாடியது. இந்தப் பகுதியில் தொடர்ந்து புலி வேட்டையாடிவருவதால் அச்சமடைந்த கிராம மக்கள் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த தாக்குதல் சம்பவம் நடந்தால் நிலைமை கைமீறிப் போகும் என யூகித்த வனத்துறையினர் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தி ஆட்கொல்லி புலியை 48 மணி நேரத்தில் உயிருடன் அல்லது சுட்டுப்பிடிக்க களத்தில் இறங்கினர். பல குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், புலியை சுடுவதில் கைதேர்ந்தவர்களையும் அழைத்துவந்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த காட்டுயிர் ஆர்வலர்கள் கொந்தளித்தனர். பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. இதனால் புலியை சுட்டுக்கொல்லும் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கிய வனத்துறையினர், தற்போது உயிருடன் பிடிக்கும் முயற்சியில் இறங்கி மங்களா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

இந்தத் தேடுதல் வேட்டையில் 6 கும்கி யானைகள், பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குநர் பாலச்சந்தர் தலைமையில் 6 கால்நடை மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கேமரா மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

` புலியை சுட்டுக்கொல்ல 48 மணி நேரம் கெடு!' - களமிறங்கிய கர்நாடக வனத்துறை

ஆட்கொல்லி புலி தேடுதல் வேட்டை குறித்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர் ஒருவர் கூறுகையில் ``மங்களா சுற்றுவட்டாரப் பகுதிகளில் சல்லடை போட்டு ஆட்கொல்லி புலியைத் தேடி வருகிறோம். இந்தப் பகுதியில் மூன்று புலிகள் உலவுவது தெரியந்துள்ளது. புலிகளின் கால்தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஆட்கொல்லி புலி எது என்ற ஆய்வும் நடைபெற்றுவருகிறது. கூடுமானவரை உயிருடன் பிடிக்கவே முயன்று வருகிறோம்" என்றார்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

இது குறித்து மைசூரைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ``இந்தப் புலியை உயிருடன் பிடிக்கவே வலியுறுத்தி வருகிறோம். அடுத்த தாக்குதல் நடப்பதற்கு முன்பு பிடிக்க வேண்டும் என்பது இலக்காக உள்ளது. ஒட்டுமொத்த வனத்துறையும் ஆட்கொல்லி புலியைத் தேடிவருகிறது. நாளை மாலைக்குள் ஆட்கொல்லி புலியைப் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.