Published:Updated:

உலக டிவி சாதனைகளைத் துவம்சம் செய்த `மேன் வெர்சஸ் வைல்ட்' மோடி எபிசோடு!

ம.காசி விஸ்வநாதன்

சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க உலகில் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இந்த அளவுக்கு டிரெண்ட் ஆனதில்லையாம்!

MAN VS WILD MODI
MAN VS WILD MODI

`மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பியர் க்ரில்ஸுடன் வனப்பகுதியில் களமிறங்கினார். உத்தரகாண்ட்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டிருந்த இந்த எபிசோடு, இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குப் பறைசாற்றும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 12 ஒளிபரப்பான பிறகு ``இது `மேன் வெர்சஸ் வைல்ட்' எபிசோடு போலவே இல்லை, எதோ நேர்காணல் போன்று இருக்கிறது", ``மோடியின் இமேஜ் பில்டிங் எபிசோடுதான் இது", ``புல்வாமா தாக்குதலின்போது மோடி இந்த படப்பிடிப்பில்தான் இருந்தார்" என விமர்சனங்கள் குவிந்தன. இவை ஒருபுறம் இருக்க ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சர்வதேச சாதனைகளைத் துவம்சம் செய்திருக்கிறதாம் இந்த எபிசோடு.

உலகம் முழுவதும் `மேன் வெர்சஸ் வைல்ட்' எபிசோடு குறித்த ட்வீட்கள் 360 கோடி முறை பார்க்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து பியர் க்ரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,``உலகில் அதிக டிரெண்ட் ஆன ஒரு டிவி நிகழ்வு இதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகம் முழுவதும் 360 கோடி முறை இந்த எபிசோடு குறித்த ட்வீட்களை மக்கள் பார்த்ததாக அவர் தெரிவித்திருக்கிறார் (3.6 Billion Impressions). இதற்கு முன்பு இந்த சாதனையை இதற்கு முன்பு 53-வது சூப்பர்பௌல் நிகழ்வு வைத்திருந்தது. இந்த அமெரிக்க கால்பந்து போட்டி குறித்த டிவீட்கள் 340 கோடி முறை மக்களால் பார்க்கப்பட்டிருந்தது.

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights

இவர் சொல்லும் கணக்கை வைத்துப் பார்க்கும்போது, இந்த எபிசோடு இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த மகத்தான ரீச்சுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது சிறப்பான மார்க்கெட்டிங் முயற்சிகள்தான். இதற்காகப் பாராட்டுகளைக் குவித்துவருகிறது டிஸ்கவரி சேனல்.