Published:Updated:

`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்!

Microsoft CEO Satya Nadella
Microsoft CEO Satya Nadella

பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் களையத் தனிமனிதப் பங்கும் முக்கியம்

நாளுக்கு நாள் காற்று மாசடைந்துகொண்டே வருகிறது. கார்பன் வாயு வெளியேற்றம்தான் காற்று மாசுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் முதன்மையான காரணங்கள் என அறிவியலாளர்கள் கண்டறிய, இனி வரும் காலங்களில் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என உலகநாடுகள் அனைத்தும் `Kyoto Protocol'-லில் கையொப்பமிட்டன. அதன்படி ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றும் கார்பன் அளவை குறைத்து வருகின்றன. எனினும் நாம் கார்பன் வெளியேற்றிய வேகத்துக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் முழு பலனையும் கொடுக்க முடியவில்லை.

பருவநிலை மாற்றத்தைச் சீராக்கவும், காற்று மாசை குறைக்கவும் நிறைய தனியார் நிறுவனங்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகின்றன. அமேசான் நிறுவனமும் தங்கள் பங்குக்கு United Nations Environment Programme கொண்டுவந்த `Carbon Neutral' என்ற திட்டத்தில் இணைந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் 'Carbon Negative' என்ற திட்டத்தில் இணைய முன் வந்துள்ளது. இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு, இது எந்த அளவுக்குச் சுற்றுச் சூழலுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.

carbon emission
carbon emission
phys.org
`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி

Carbon Neutral திட்டத்தின்படி இதில் இணைகிற எந்த நிறுவனமும் அல்லது நாடும் கொஞ்சம் கொஞ்சமாக கார்பன் வெளியேற்றும் அளவைக் குறைத்து, முற்றிலுமாக கார்பன் வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகள் `Carbon Neutrality'-யை கொண்டுவர உறுதியேற்றிருக்கின்றன. அமேசான், இன்போஸிஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களும் Carbon Neutral ஆக உறுதியேற்றிருக்கின்றன. பூட்டான் மற்றும் சூரினாம் (Suriname) ஆகிய இரு நாடுகள் கார்பன் வெளியேற்றத்தை முழுவதுமாகக் குறைத்து Carbon Neutrality-யை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கின்றன.

co2 emission per capita
co2 emission per capita
wikipedia

ஆனால், பருவநிலை மாறிவரும் வேகத்துக்கு Carbon Neutrality மட்டும் போதாது எனக் கூறுகின்றனர் அறிவியலாளர்கள். ஏற்கெனவே பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டது. இனி கார்பன் வெளியேறாமல் தடுப்பது மட்டுமின்றி இதுவரை நாம் வெளியேற்றிய கார்பன் வாயுக்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் `Carbon Negative'.

`காற்று மாசுபாட்டால் ஓர் இந்தியரின் வாழ்நாள் எவ்வளவு குறைகிறது... தெரியுமா?!' - எச்சரிக்கும் ஆய்வு

இதுவரை தாங்கள் வெளியேற்றிய கார்பனின் அளவை குறைக்கும் பொருட்டு பூட்டான் நாடு 2018-ம் ஆண்டிலிருந்து `Carbon Negative' திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. தற்போது இதே திட்டத்தைப் பின்பற்றி 2050-ம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனம் வெளியிட்ட கார்பன் அளவை சமன் செய்வோம் எனக் கூறியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இது எப்படி சாத்தியம் என்பதையும் மைக்ரோசாஃப்டின் பிரசிடன்ட் ஆன பிராட் ஸ்மித் அவர் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

carbon negative
carbon negative
blog.microsoft.com

புதிதாகக் காடுகளை உருவாக்குவது மற்றும் ஏற்கெனவே இருக்கும் காடுகளை விரிவுபடுத்துவது. மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பது மற்றும் மண் வளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது. சுற்றுப்புறக் காற்றில் உள்ள கார்பன் வாயுவைத் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு அகற்றுவது. ஆகியவற்றைச் செய்வதன் மூலம் 2050-க்குள் `Carbon Negative'-ஐ சாத்தியமாக்கப் போவதாக அந்நிறுவன தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கார்பன் வெளியேற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டறிய ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் களையத் தனிமனிதப் பங்கும் முக்கியம்தான். நம்மால் முடிந்த அளவு ஒரு சிறிய மரம் நட்டுப் பராமரிக்கலாம். பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்து மண்ணைக் கெடுக்காமல் இருக்கலாம். அதைவிட முக்கியமாக அடுத்த தலைமுறையான நம் பிள்ளைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

சிறுதுளி பெருவெள்ளம்.

அடுத்த கட்டுரைக்கு