Published:Updated:

இறுதி வரை சூழலுக்கான என் பணி தொடரும்..! வாழ்ந்து காட்டும் `பசுமை' ஆசிரியர்!

மாணவர்களுடன்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது, என்பதால் மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்தாலும் 35 ஆண்டுகளாகப் பள்ளிக்கு சைக்கிளில்தான் சென்று வருகிறார். மரங்களை நடுங்கள், சுற்றுச்சூழலைக் காப்போம், பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள் போன்ற வாசகங்களைத் தனது சைக்கிளில் வைத்துள்ளார்.

இறுதி வரை சூழலுக்கான என் பணி தொடரும்..! வாழ்ந்து காட்டும் `பசுமை' ஆசிரியர்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது, என்பதால் மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்தாலும் 35 ஆண்டுகளாகப் பள்ளிக்கு சைக்கிளில்தான் சென்று வருகிறார். மரங்களை நடுங்கள், சுற்றுச்சூழலைக் காப்போம், பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள் போன்ற வாசகங்களைத் தனது சைக்கிளில் வைத்துள்ளார்.

Published:Updated:
மாணவர்களுடன்

பள்ளி ஆசிரியரான சுர்பியோ குமார் சாது `சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்’ என்பதை தன் வாழ்நாள் நோக்கமாக நினைத்து செயல்பட்டு வருகிறார். பள்ளி மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்துவதோடு, மக்கள் மத்தியிலும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஆசிரியர் சுர்பியோ குமார் சாது
ஆசிரியர் சுர்பியோ குமார் சாது

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான டாக்டர் சுர்பியோ குமார் சாது தினந்தோறும் மக்களைச் சந்தித்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசிவருகிறார். அத்துடன் தன் வாழ்நாளில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருள்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது, என்பதால் மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிந்தாலும் 35 ஆண்டுகளாகப் பள்ளிக்கு சைக்கிளில்தான் சென்று வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மரங்களை நடுங்கள், சுற்றுச்சூழலைக் காப்போம், பிளாஸ்டிக்கைக் கைவிடுங்கள் போன்ற வாசகங்களைத் தனது சைக்கிளில் வைத்துள்ளார். இதைப் படித்த பிறகு ஒருவர் மரம் நட்டால், அதுவே எனக்கு மன நிறைவைத் தரும் என்கிறார்.

விருது வாங்கும் போது
விருது வாங்கும் போது

சாது விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியை முடித்த இவர், மேற்கு வங்க மாநில முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 19 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதன் பின், போல்பூர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கல்விப் பணியில் சிறந்து விளங்கிய இவர், `சிக்ஷா ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் நடத்தி வரும் இவர், பள்ளியில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்.

விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்கான என் பணி கடைசி வரை தொடரும் என உற்சாகத்துடனும் உறுதியோடும் தெரிவித்துள்ளார்.