Published:Updated:

50 கிராமங்களில் நிலத்தடிநீரை பாழாக்கியதா ONGC? நாகையில் என்ன நடக்கிறது?

ஓஎன்ஜிசி

கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளிவரும் கடல் நீரைவிட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீரைக் கொண்டுவருகிறார்கள். அந்த உப்பு நீரை 1,800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

50 கிராமங்களில் நிலத்தடிநீரை பாழாக்கியதா ONGC? நாகையில் என்ன நடக்கிறது?

கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளிவரும் கடல் நீரைவிட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீரைக் கொண்டுவருகிறார்கள். அந்த உப்பு நீரை 1,800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

Published:Updated:
ஓஎன்ஜிசி

பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் கொண்டுவரப்படும், கெட்ட உப்புநீரை பூமிக்கடியில் செலுத்துவதால், நிலத்தடிநீர் பாழாகி குடிநீருக்கும் வழியின்றி  அவதிப்படுவதாகப் பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கொளப்பாடு, கமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினம்தோறும் 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வருகின்றன.

ஓஎன்ஜிசி
ஓஎன்ஜிசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் கச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளிவரும் கடல் நீரை விட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீரைக்  கொண்டுவருகிறார்கள். அந்த உப்பு நீரை 1,800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டசேரி, எராவாஞ்சேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஓ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாசு நீர் சுத்திகரிப்பு நிலைத்தை அகற்ற வேண்டும் என்றும், சீரான தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓ.என்.ஜி.சி நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கார்த்திக்
கார்த்திக்

இதுகுறித்து நரிமணம் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக்கிடம் பேசினோம். ``ரசாயன கலவைகளோடு கச்சா எண்ணெய் எடுக்கிறார்கள். அதனோடு கடல் நீரைவிட 10 மடங்கு உவர்த்தன்மை கொண்ட கெட்ட உப்பு நீரும் வரும். இதை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வேறு எங்கும் கொட்ட முடியாது. எனவே,  அவர்கள் எங்கள் பகுதியிலுள்ள ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கு அடியில் செலுத்துகிறார்கள். இந்த மண்ணையும் மக்களையும் கெடுப்பதில் கொஞ்சம்கூட மனித இதயமே இல்லாதவர்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர்.

இதனால் எங்கள் சுற்று வட்டாரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் காவியாகவும் உப்பாகவும் மாறிப்போய்விட்டது. இதுபற்றி  நாங்கள் கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் புகார் மனு கொடுத்தோம். அரசு தரப்பில் ஓ.என்.ஜி.சி-யால் இப்பகுதி மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் என்பது பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள்.

அவர்களும் வந்தார்கள். அவர்களிடம் விரிவாகக்  கூறியிருக்கிறோம். விரைவில் இந்தப்  பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு மட்டுமல்ல; குடிநீருக்கும் அலைகின்ற பரிதாபம் ஏற்பட்டுவிடும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism