Published:Updated:

இயல்புக்குத் திரும்பிய இயற்கை!

சுற்றுச்சூழல்
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

இயல்புக்குத் திரும்பிய இயற்கை!

சுற்றுச்சூழல்

Published:Updated:
சுற்றுச்சூழல்
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுச்சூழல்
2019-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி மாலை... பழைய மாமல்லபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பனிமூட்டத்தைப் போல் கட்டடங்களைப் புகை சூழ்ந்திருந்தது. சுவாசிக்க முடியாமல் திணறும் அளவுக்கான புகை மூட்டம் அது.

அடுத்த நாள் காலையில் வேளச்சேரி காற்று தரக் கண்காணிப்பு மையத்தின் இணையதளத்தில் பார்த்தபோது காற்றை மாசுபடுத்தும் நுண்துகள்களின் அளவு சராசரி அளவைவிட மூன்று மடங்கு அதிகரித் திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மாசு காரணிகளான நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவை அளவுக்கு அதிகமாகக் காற்றில் கலந்திருப்பதும் தெரிய வந்தது. நம் வாழ்வுக்கு ஆதாரமான சூழலை நாம் எந்தளவுக்கு வைத்திருக்கிறோம் என்று ஆதங்கம் பொத்துக்கொண்டு வந்தது.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

அதற்குப் பிறகு, எவ்வளவோ நடந்துவிட்டது. கொரோனா பேரிடரால், 2020-ம் ஆண்டின் பெரும்பகுதியை நாம் வீட்டுக் குள்ளேயேதான் கழித்தோம். அந்த நேரத்தில், ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வந்தபோது, கடந்த ஆண்டின் நவம்பர் மாத அனுபவம் மீண்டும் நினைவுகளில் நிழலாடியது. இந்தமுறை நிம்மதிப் பெருமூச்சைச் சற்று ஆழமாகவே உள்ளிழுக்க முடிந்தது. காற்று பழையபடி புகைமூட்டமாக இருக்கவில்லை. பரிசுத்தமாக இருந்தது. நன்கு உள்ளிழுத்து, ஆழச் சுவாசித்து, அதன் இனிமையையும் தெளிவையும் உணர முடிந்தது. அது ஊரடங்கால் நிகழ்ந்த அதிசயம். வெறிச்சோடிய சாலைகளும், இயக்கமற்று இருந்த தொழிற்சாலைகளின் பேரமைதியும் இயற்கையிடம் மன்னிப்பு கோருவதைப் போலத் தோன்றியது. கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் இங்கு மட்டுமல்ல உலகம் முழுக்க இயற்கை தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டது.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

காவிரி ஆற்றின் தரம் முன்பைவிடத் தற்போது உயர்ந்திருப்பதாகக் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த மே மாதம் அறிவித்ததை நாம் கவனிக்க வேண்டும். தமிழகத்திலும் அப்படித்தான். ஈரோடு மாவட்டத்தில் காவிரியில் இணையும் பெரும் பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, ராஜவாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், சுண்ணாம்பு ஓடை ஆகிய நீர்நிலைகளையொட்டி 469 சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளும் 37 தோல் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நேரடியாகக் காவிரி ஆற்றில்தான் கலந்தன. அதனால், காவிரி நீர் நஞ்சாகிக்கொண்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஊரடங்கால் சாயப்பட்டறைகள் மொத்தமும் முடக்கியதால் தற்காலிகமாகக் காவிரியில் கழிவு நீர் கலப்பது நின்றது. அதனால், காவிரி நீரின் தரமும் மேம்பட ஆரம்பித்தது.

“நீர் மாசுபாட்டைச் சரிசெய்வதற்கும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கும் இந்த ஊரடங்கு பெருமளவு கைகொடுத்திருக் கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோலப் பஞ்சாபின் சட்லெஜ் நதி தூய்மையடைந்தது. சட்லெஜ் நதியை மாசுபடுத்திக்கொண்டிருந்த 228 சாயப்பட்டறைகளும் 1,649 மின்முலாம் பூசும் ஆலைகளும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்ததே காரணம். அதேபோல கங்கையும் தூய்மையடைந் திருக்கிறது. ரிஷிகேஷில் நீர்மட்டம் உயர்வதுடன் நீரில் இருக்கும் கரைந்த ஆக்சிஜனின் அளவும் அதிகரித்திருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் நீர் மாசுபாடு குறைய ஆரம்பித்தது. சூழல் சீர்கேட்டால் அடர்பச்சை நிறத்துக்கு மாறிப் போயிருந்த இத்தாலி, வெனிஸ் நகரத்தின் மாசடைந்த நீர்நிலைகள் தரை தெரியுமளவுக்குத் தெளிவடைந்தன. ஊரடங்கு காரணமாக, இத்தாலி படகுப் போக்குவரத்தை நிறுத்தியதால் விளைந்த நன்மை இது. சீனாவில் காற்றில் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயுவின் அளவு குறைந்துள்ளதை நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

நீர்நிலைகள் தூய்மையடைந்தது மட்டுமல்ல 25 சதவிகித கரிம வாயு வெளியீடு கடந்த நான்கே மாதங்களில் குறைந்தது. நேச்சர் காலநிலை மாற்றம் (Nature Climate Change) என்ற ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை யின்படி, “உலகளவில், ஏப்ரல் மாதம் மட்டுமே 17 மில்லியன் டன் கரிம வெளியீடு குறைந்தது. இந்தியாவிலும் அந்த ஒரே மாதத்தில் வழக்கமான கரிம வெளியீட்டில் 26 சதவிகிதம் குறைந்தது. இந்தியாவின் 85 நகரங்களில் காற்றின் தரம் அதிகரித்தது. புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் காற்றை மாசுபடுத்தும் நுண்துகள்களின் அளவு காற்றில் 71 சதவிகிதம் குறைந்தது. கந்தக டையாக்சைடு அளவு 79 சதவிகிதம் குறைந்துள்ளது. உலகளவில், அனல் மின் நிலையங்களின் நிலக்கரிப் பயன்பாடு 36 சதவிகிதம் குறைந்தது” என்று தெரியவந்துள்ளது.

இப்படிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். “நீர் மாசுபாட்டைச் சரிசெய்வதற்கும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கும் இந்த ஊரடங்கு பெருமளவு கைகொடுத்திருக்கிறது. இது மக்களுக்கு இக்கட்டான காலகட்டம்தான் என்றாலும்கூட, காலநிலை அவசரம் என்ற இதைவிடப் பெரிய ஆபத்திலிருந்து நாம் மீண்டெழ இதுவொரு பாடம்” எனச் சூழலியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஊரடங்கு காலத்தில் வேகமாக மீண்ட இயற்கை ஊரடங்கு தளர்வால் மீண்டும் பழையபடி பாதிப்புக் குள்ளாக ஆரம்பிக்கிறது. அதைத் தடுக்க வில்லையெனில் நாம் இதைவிடப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாளைய சந்ததிகள், சுத்தமான காற்றையும் நீரையும் வளமான சூழலையும் அனுபவிக்க வேண்டுமெனில், நம்மால் சிதைந்த இயற்கையின் இயல்புநிலையை நாம்தான் சீர்படுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவருமே முயற்சி எடுக்க வேண்டும்.