Published:Updated:

`காலி மதுபாட்டில்களை இங்க கொடுத்திடுங்க!' சேகரிப்பு மையங்களைத் தொடங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

சேகரிப்பு மையம்

காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், காலி மதுபாட்டில்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

`காலி மதுபாட்டில்களை இங்க கொடுத்திடுங்க!' சேகரிப்பு மையங்களைத் தொடங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், காலி மதுபாட்டில்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Published:Updated:
சேகரிப்பு மையம்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்களாலும் காலி மதுபாட்டில்களாலும் நீலகிரியில் உள்ள நீரோடைகளும் வனங்களும் கடுமையாக மாசடைந்து வருகின்றன.

காலி மதுபாட்டில்கள்
காலி மதுபாட்டில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அவலம் குறித்து உலக தண்ணீர் தினமான கடந்த மார்ச் 22-ம் தேதி எமது பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தோம். நாம் வெளியிட்ட வீடியோவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் திரையிட்டுக் காண்பித்துள்ளனர். இதைப் பார்த்த பிறகு, நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தவகையில் சமீபத்தில் நீலகிரிக்கு வருகை தந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர், பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நீரோடைகள் மற்றும் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், காலி மதுபாட்டில்கள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றனர்.

காலி மதுபாட்டில்கள்
காலி மதுபாட்டில்கள்

காலி மதுபாட்டில்களை முறையாகக் கையாளத் திட்டம் வகுக்காவிட்டால் மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக அகற்ற நேரிடும் என எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க 15 மையங்களை அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ``மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ஊட்டி தலைக்குந்தாவில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றப் பகுதிகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதற்கானப் பணியாளர்களை நியமித்து சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும், நீர்நிலைகள், நெடுஞ்சாலைகள், வனங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த மையங்களில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிக் கழிவுகளை வழங்கலாம். மொத்தமாக சேகரித்து தேவைப்படுவோருக்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும்" என்றார்.

காலி மதுபாட்டில்கள்
காலி மதுபாட்டில்கள்

இது குறித்து பேசிய நீலகிரி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்பப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், காலி மதுபாட்டில்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் காலி மதுபாட்டில்களை நீர்நிலைகள், வனப்பகுதிகளில் வீசிச் செல்வது தடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism