Published:Updated:

தடைகள் தகர்த்து தானாக வழித்தடத்தை மீட்ட யானை; நீலகிரி சுவாரஸ்யம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனது வழக்கமான வழித்தடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை யானைகளே தகர்த்தெறிந்து மீட்டெடுத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆசிய யானைகளின் வாழிடங்களில், மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. காலங்காலமாக யானைகள் பயன்படுத்தி வந்த வழித்தடங்களை ஆக்கிரமித்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வழியைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு யானைகள் வர நேரிடுகின்றன. இதனால் யானை-மனித எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை

ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள யானைகளின் வழித்தடங்களை மீட்கும் முயற்சியில் நீதிமன்றங்கள் அக்கறை காட்டி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனது வழக்கமான வழித்தடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை யானைகளே தகர்த்தெறிந்து மீட்டெடுத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நீலகிரி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பண்ணைப் பகுதியைக் காட்டு யானைகள் அடிக்கடி கடப்பது வழக்கம். இந்த நிலையில், ஒரு குட்டி, ஒரு தாய் உள்ளிட்ட மூன்று யானைகள் நேற்று இந்தப் பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் வழக்கமாகப் பயன்படுத்தும் வழித்தடத்தில் தோட்டக் கலைத்துறை உரம் பதனிடும் மையம் ஒன்றைப் புதிதாக அமைத்திருந்தது.

தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை

புதிதாக ஆக்கிரமிப்பு இருப்பதைக் கண்டு சிறிது நேரம் தயங்கி நின்ற தாய் யானை, மாற்று வழியைத் தேர்வு செய்யாமல் முன்பக்கம் அந்தக் கூடாரத்துக்குள் குட்டியுடன் நுழைந்து தகர்த்தெறிந்து பின்பக்கமாகக் கெத்தாக வெளியே வந்து கடந்து சென்றது. தாய் யானையின் இந்தச் செயலைக் கண்டு தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் திகைத்து நின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யானைகள் வழித்தடம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் மனோகரன், ``குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான வனப்பகுதியில் சுமார் 15 காட்டு யானைகள் குழுக்களாகப் பிரிந்து உலா வருகின்றன. சமீபகாலமாக இந்த யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, வேலிகள் அமைப்பது, விவசாய தோட்டங்களாக மாற்றுவது, காட்டேஜ் போன்ற கட்டுமானங்களை எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவரும் யானைகள் தடம் மாறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன. எனவே தோட்டக்கலைப் பண்ணைப் பகுதிகளைக் காட்டுயானைகள் சுதந்திரமாகக் கடந்து செல்லும் ஏற்பாட்டை நீலகிரி தோட்டக்கலைத்துறை செய்ய வேண்டும்" என்றார்.

தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
தாமாகவே வழித்தடைத்தை மீட்டுக்கொண்ட யானை
விடுதலைக்குத் தயாராகும் ரிவால்டோ யானை; கூண்டிலிருந்து வெளியேற்றும் முடிவால் மகிழ்ச்சி!

நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``யானைகள் இங்கு வருவது வழக்கமான ஒன்றுதான். இங்கு கட்டுமானங்களை எழுப்பவில்லை. தற்காலிகக் கூடாரங்களை மட்டுமே அமைத்துள்ளோம். அதுவும் இங்கு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் பாதுகாப்புக்காகவேதான் செய்தோம். யானைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு