Published:Updated:

ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்ததா முதுமலை யானை? கலக்கத்தில் வனத்துறையினர்!

ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை

தெங்குமரஹாடா மங்களப்பட்டி வனத்தில் வாய் மற்றும் தும்பிக்கையில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்த காட்டுயானைக்கு ஆந்த்ராக்ஸ் அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி மங்களப்பட்டி அடர் வனத்தில் ரோந்துப் பணி மேற்கொண்ட வனத்துறைப் பணியாளர்கள், காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். வாய் மற்றும் தும்பிக்கை வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்திருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை
`தமிழகத்தில் இதுதான் முதல்முறை!' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு

வனக்கால்நடை மருத்துவர் குழுவுடன் சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், இறந்த யானையின் உடலில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்தனர். ஆந்த்ராக்ஸ் நோய் பாதித்த விலங்குகளைக் கையாளும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புகள் இருப்பதால், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி யானையின் உடலில் இருந்து ஆய்வு மாதிரிகளை சேகரித்து, யானையின் உடலை தீயிட்டு எரித்தனர். மற்ற யானைகளுக்கும் ஆந்தராக்ஸ் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தப் பதற்றம் குறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரி ஒருவர், ``ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்த இந்த இளம் ஆண் காட்டு யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய்க்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. எனவே நமது வன ஊழியர்கள் யாரையும் யானையின் உடல் அருகில் அனுமதிக்கவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள், முதுமலை வனக்கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து யானையின் உடலில் இருந்து ஆய்விற்காக மாதிரிகளைச் சேகரித்தனர்.

ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் இறந்த யானை
̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை

பின்னர் யானையின் உடலில் பார்மலின் ரசாயன மருந்து தெளித்து, தீயிட்டு எரித்தோம். 50 மீட்டர் சுற்றளவில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வனத்தில் கிருமி நாசினி தெளித்துள்ளோம். கால்நடைத்துறை மூலம் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு