Published:Updated:

அ.தி.மு.க நிர்வாகியின் மரக்கடத்தலுக்கு உதவிய அதிகாரிகள்; சஸ்பெண்ட் செய்து வனத்துறை அதிரடி!

கூடலூரில் வெட்டப்பட்ட காட்டு மரங்கள் [file image]
கூடலூரில் வெட்டப்பட்ட காட்டு மரங்கள் [file image]

காட்டு மரங்களை வெட்டுவதற்கு உடைந்தையாக இருந்த 2 வனச்சரகர்கள் உட்பட 4 வனத்துறை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கமாகவே வனக்கொள்ளைகள் அதிகம் நடைபெறும் நீலகிரிக் காடுகளில் தற்போதைய கொரோனா ஊரடங்கு, இதை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் பொது முடக்கத்தை சாதகமாக்கிக்கொள்ளும் வனக்கொள்ளைக் கும்பல்கள் வனத்துறையின் உதவியோடு அரிய வகை காட்டுமரங்களை கபளீகரம் செய்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தி வருகின்றனர். கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மரக்கடத்தல்கள் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கூடலூரில் வெட்டப்பட்ட சந்தன மரங்கள்
கூடலூரில் வெட்டப்பட்ட சந்தன மரங்கள்
அடுத்தடுத்து மாயமாகும் சந்தன மரங்கள்; என்ன நடக்கிறது நீலகிரியில்?

அ.தி.மு.க நிர்வாகியும் மர வியாபாரியுமான கூடலூர் சஜ்ஜீவன், கூடலூர் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள 300 சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதாக அனுமதி பெற்று, அதே பகுதியில் உள்ள ஏராளமான காட்டு மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளார். இந்த அத்துமீறல் குறித்து வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், வனத்துறை ஊழியர்கள் சிலர் மரக்கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்து மரக்கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்டு வந்ததை உறுதி செய்து, கடமை தவறிய வனத்துறையினரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த முறைகேடு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``கடந்த ஓராண்டாக இந்தப் பகுதியில் முறைகேடாக மரக்கடத்தல் நடந்தாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் எங்களுக்கு புகார்கள் வந்தன. கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வருதின் உத்தரவின் பேரில், ஆய்வு செய்ததில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவு சில்வர் ஓக் மரங்களை வெட்டியதும் அருகில் உள்ள காட்டுமரங்களை வெட்டியதும் தெரிய வந்தது.

கூடலூரில் வெட்டப்பட்ட சந்தன  மரங்கள்
கூடலூரில் வெட்டப்பட்ட சந்தன மரங்கள்
நீலகிரி: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; கூடுதல் எஸ்.பி சஸ்பெண்ட்! காவல்துறை அதிரடி !

மரம் வெட்டும் பணி நடைபெற்றதை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நடுவட்டம் வனச்சரகர் கூடுதல் பொறுப்பு வனச்சரகர்கள் சிவா, குமார், வனவர் தருமசக்தி மற்றும் வனக் காவலர் நர்சீஸ் குட்டன் ஆகிய நான்கு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உரிய‌ நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு