Published:Updated:

கழுத்தை இறுக்கிய நைலான் கயிறு; காயத்தோடு தவித்த காட்டுமாடு; மீட்டு உதவிய வனத்துறை!

காயத்தோடு தவித்த காட்டுமாடு
காயத்தோடு தவித்த காட்டுமாடு

கழுத்தில் இறுக்கப்பட்ட கயிற்றுடன் காயத்தோடு கடந்த ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்த காட்டுமாட்டிற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து கயிற்றை அகற்றியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் யானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, கரடி போன்ற வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நாள்தோறும் உலவி வருகின்றன. இவ்வாறு வெளியில் உலவும் வன விலங்குகள் பல்வேறு வகையான இடர்களை எதிர்கொள்வதோடு, மனிதர்கள் மேற்கொள்ளும் தவறுகளால் பல சமயங்களில் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன. அதிலும் குறிப்பாக நீலகிரி வனக்கோட்டத்தில் காட்டுமாடுகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றன.

காயத்தோடு தவித்த காட்டுமாடு
காயத்தோடு தவித்த காட்டுமாடு
யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத மின்வேலி; பரிதாபமாக உயிரிழந்த கரடி!

இந்நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட தேயிலைத் தோட்டங்களில் காட்டுமாடு ஒன்று, கழுத்தில் இறுக்கப்பட்ட நைலான் கயிற்றுடன் காயத்தோடு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவதிப்பட்டு வந்துள்ளது. இதனைக் கண்ட ஊர் மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். கழுத்தில் இறுக்கப்பட்ட கயிற்றுடன் அவதிப்பட்டு வந்த காட்டுமாட்டிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர், முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழுவாக களமிறங்கினர்.

நடுஹட்டி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் இருந்த அந்த மாட்டின் அருகில் சென்ற மீட்புக் குழுவினர், துப்பாக்கி மூலம் மயக்க ஊசியைச் செலுத்தினர். சிறிது நேரத்தில் அரை மயக்க‌ நிலைக்குச் சென்ற அந்த காட்டுமாட்டின் அருகில் சென்று, அதன் கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த நைலான் கயிற்றை வெட்டி அகற்றினர். மேலும் கழுத்தில் ஏற்பட்டிருந்த காயத்திற்கும் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்தக் காட்டுமாடு எழுந்து வனத்திற்குள் சென்றது.

காயத்தோடு தவித்த காட்டுமாடு
காயத்தோடு தவித்த காட்டுமாடு
`தமிழகத்தில் இதுதான் முதல்முறை!' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு

இது குறித்துப் பேசிய வனத்துறையினர், ``ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்த இந்தக் காட்டுமாட்டிற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு