Published:Updated:

அரிதான புதிய வகை நுண்ணுயிரி கண்டுபிடிப்பு; சாதித்த அரசுக் கல்லூரி மாணவி!

புதிய வகை நுண்ணுயிரி
புதிய வகை நுண்ணுயிரி

பயோனிச்சியூரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரி இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு `பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்' எனவும் பெயரிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. இந்நிலையில், வன விலங்கு உயிரியல் துறையின் ஆய்வு மாணவியாக உள்ள முஹ்சினா துன்னிசா தனது பேராசிரியரின் வழிகாட்டுதலுடன், இந்தப் பகுதியியிருந்து மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வந்தார்.

புதிய வகை நுண்ணுயிரி
புதிய வகை நுண்ணுயிரி
`ஒருங்கிணைந்த பண்ணை இப்படி இருக்கணும்!' - சாதித்த கல்லூரி முதல்வர் #IntegratedFarming

கல்லூரியில் உள்ள பல்லுயிர் மூலக்கூறு ஆய்வகத்தில் தொடர்ந்து ஆய்வு செய்ததில், அவர் மிகவும் அரிதான புதிய வகை மண் நுண்ணுயிரி ஒன்று இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார். பயோனிச்சியூரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரி இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு `பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்' எனவும் பெயரிட்டுள்ளார்.

நாட்டிலேயே முதல் முறையாக இந்த அரிய வகை நுண்ணுயிரியைக் கண்டறிந்து சாதித்த ஆய்வு மாணவி முஹ்சினா துன்னிசாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு பேசத் துவங்கினோம்.

``கூடலூர் பாடவயல் பகுதியைச் சேர்ந்த நான், எனது இளங்கலை படிப்பிலிருந்து தற்போதைய பி.எச்.டி ஆய்வு வரை ஊட்டி அரசு கல்லூரியில் பயின்று வருகிறேன். இந்தியாவில் இதுவரை இந்த நுண்ணுயிரி அறியப்பட்டதாக ஆய்வுகள் ஏதும் இல்லை. உலகில் வெறும் ஆறு சிற்றினங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முஹ்சினா துன்னிசா
முஹ்சினா துன்னிசா

சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியாவின் குளிர்ச்சி மிகுந்த அதிக உயரமான பகுதிகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பிரிங்டெயில்ஸ் என பொதுவாக அழைக்கப்படும் இந்த மண் நுண்ணுயிரி 1 மி.மீ நீளம் கொண்டது. இந்த வகை நுண்ணுயிரிகள் மண்ணில் உள்ள கழிவுப் பொருள்களை மட்கச் செய்து, மண்ணிற்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. மாசுபடாத மண்ணிலிருந்தே இந்த நுண்ணுயிரி கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம் விவசாய நிலங்கள் மற்றும் கழிவுகள் கொட்டப்படும் மண்ணில் இவை காணப்படவில்லை. இந்த புதிய சிற்றினம் சீனாவில் கண்டறியப்பட்ட சிற்றினத்துடன் ஒத்துள்ளது. குளிர்ந்த வெப்பநிலையில் பால் மற்றும் பாலில்லா இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. இந்த நுண்ணுயிரி தொடர்பான ஆய்வுக் கட்டுரை `ஸ்லோவாக் அகாடமி ஆஃப் சயின்ஸ்'அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட பயாலாஜியா எனப்படும் சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வகை நுண்ணுயிரி
புதிய வகை நுண்ணுயிரி
''அஞ்சு ரூபாய் போடு - மாஸ்க் எடு''- சென்னை இன்ஜினீயர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!

புதிதாக கண்டறியப்பட்ட இந்த நுண்ணுயிரியின் ஆண் மற்றும் பெண் உயிரியின் மாதிரிகள் குறிப்புகளுக்காக கொல்கத்தாவில் உள்ள ஜூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு