Published:Updated:

அடுத்தடுத்து மாயமாகும் சந்தன மரங்கள்; என்ன நடக்கிறது நீலகிரியில்?

சந்தன மரக்கடத்தல்
சந்தன மரக்கடத்தல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள அய்யன்கொல்லி ஐயப்பன் கோயில் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர்‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாகவே வனக்கொள்ளை அதிகம் நடைபெறும் மாவட்டம் நீலகிரி. கொரோனா ஊரடங்கில் அது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை சாதகமாக்கி ஏராளமான காட்டு மரங்கள் கொள்ளை போயின. அதேபோல் தற்போதைய இரண்டாவது அலையினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை சாதகமாக்கிய வனக்கொள்ளையர்கள், இரவு பகலாகக் காட்டு மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர். கோத்தகிரி மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரக்கடத்தல் அதிகரித்துள்ளது.

சந்தன மரக்கடத்தல்
சந்தன மரக்கடத்தல்
தொடரும் மழை, சாலையில் விழும் மரங்கள், தயார் நிலையில் 456 முகாம்கள்; நீலகிரி நிலவரம்!

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அய்யன்கொல்லி பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை சிலர் வெட்டிச் சென்றுள்ளனர். அதேபோல் அத்திச்சால் பகுதியில் உள்ள வருவாய் நிலத்தில் இருந்த சந்தன மரத்தை சிலர் இரவு நேரத்தில் வெட்ட முயன்றபோது ஊர் மக்கள் விரட்டியடித்துள்ளனர். குடியிருப்பு அருகில் உள்ள சந்தன மரங்களை அச்சமின்றி வெட்டிச் செல்லும் கும்பலால் பந்தலூர் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சந்தன மரக்கடத்தல் குறித்து வனத்துறை, ``அய்யன்கொல்லி கடைவீதியை ஒட்டியுள்ள ஐயப்பன் கோயில் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை மூன்று சந்தன மரங்களை சிலர் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதேபோல் அத்திச்சால் பகுதியில் உள்ள வருவாய் நிலத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் செல்லும் வகையில், கயிற்றால் கட்டியுள்ளனர்.

சந்தன மரக்கடத்தல்
சந்தன மரக்கடத்தல்
`பாகுபலிக்கு இதனால்தான் ரேடியோ காலர் பொருத்துறோம்!' - கோவை வனத்துறை சொல்வது என்ன?

பாதியளவு மரத்தை வெட்டியபோது ஏற்பட்ட சத்தம் காரணமாக அருகிலிருந்த மக்கள் விரட்டியுள்ளனர். மக்களைப் பார்த்த அந்தக் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வருவாய்த்துறை உதவியோடு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு