Published:Updated:

விடுதலைக்குத் தயாராகும் ரிவால்டோ யானை; கூண்டிலிருந்து வெளியேற்றும் முடிவால் மகிழ்ச்சி!

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

``யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்படும். யானை எங்கெல்லாம் செல்கிறது, அதன் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க முடியும்".

சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மசினகுடி சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அலைந்து வந்த ரிவால்டோ என்ற ஆண் காட்டுயானைக்கு தற்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர், ரிவால்டோவுக்கு கரும்பு மற்றும் பழங்களைக் கொடுத்து நடக்கவைத்தே தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

தும்பிக்கையில் ஏற்பட்ட காயம்
தும்பிக்கையில் ஏற்பட்ட காயம்
முகாம் நோக்கி 50 மணி நேரப் பயணம், திடீரென தப்பிச்சென்ற `ரிவால்டோ' யானை... என்ன நடந்தது?

இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்ததால், வாழைத்தோட்டம் பகுதியில் க்ரால் எனப்படும் மரக்கூண்டை அமைத்து படிப்படியாக பழக்கப்படுத்தி மரக்கூண்டில் அடைத்தனர். க்ராலில் ஒரு மாதத்திற்கும் மேலாக ரிவால்டோ யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரிவால்டோ யானையின் உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மீண்டும் வனத்துக்குள் விடுவிப்பதா அல்லது முகாம் யானையாக மாற்றுவதா என முடிவெடுக்க 8 நபர்கள் கொண்ட சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் தற்போது ரிவால்டோ யானையை மீண்டும் வனத்துக்குள் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன் முயற்சியாக க்ராலிலிருந்து ரிவால்டோவை வெளியேற்றி, கட்டுப்படுத்தப்பட்ட திறந்தவெளி வனத்தில் வைத்து சில நாள்கள் பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையின் இந்த முடிவு சூழலியல் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை
நீலகிரி: பிடிபட்ட `ரிவால்டோ' யானை... வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

ரிவால்டோ யானையை விடுவிப்பது தொடர்பாக பேசிய முதுமலை அதிகாரி ஒருவர், `இந்த யானையின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தோம். முதலில் மரக்கூண்டிலிருந்து வெளியில் கொண்டு வந்து, சில நாள்கள் குறிப்பிட்ட பகுதிக்குள் வைத்து பராமரிக்கவுள்ளோம். அதன்பின் இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு காட்டிற்குள் விடுவிக்கப்படும். யானை எங்கெல்லாம் செல்கிறது, அதன் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு