Published:Updated:

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கிய புலி; உயிரிழந்த சோகம்!

முதுமலை
முதுமலை

புதர் மறைவில் இருந்த புலி ஒன்று திடீரென இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் ஆகியவை இணைந்த இந்த முச்சந்திப்பு பகுதி உலகிலேயே காடுகளில் அதிகளவு எண்ணிக்கையிலான புலிகள் வாழும் வனவளம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த காப்பகங்களை ஒட்டிய பகுதிகளில் பழங்குடிகள் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களின் குடியிருப்புகள், விளை நிலங்கள் அதிகளவில் உள்ளன.

முதுமலை
முதுமலை
5 வயது மகளை கவ்விய சிறுத்தை; போராடி மகளை மீட்ட வீரத்தாய்!

அப்படியிருந்தும் முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி-மனித எதிர்கொள்ளல்கள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முதுமலை சிங்காரா வனப்பகுதியில் கௌரி என்ற பழங்குடி பெண் ஒருவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது முதுமலை முதுகுழி பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த 49 வயதான கிருஷ்ணன் என்ற முதியவர் தற்போது புலி தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், ``இதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். புதர் மறைவில் இருந்த புலி ஒன்று திடீரென இவரைத் தாக்கியுள்ளது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

முதுமலை
முதுமலை
கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட விபரீதம்; யானை தாக்கி உயிரிழந்த பழங்குடி இளைஞர்!

இப்பகுதியில் உள்ள மக்களை மறு குடியமர்வுத் திட்டத்தின் கீழ் வெளியேற்றி வருகிறோம்.பெரும்பாலான மக்கள் அரசின் பலன்களைப் பெற்றுக்கொண்டு வெளியேறிவிட்டனர். பழங்குடி அல்லாத சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் மாற்றிடம் வழங்க தயாராக இருந்தோம். ஆனால் இவர் இங்கிருந்து வெளியேற மறுத்து வந்தார்.இந்த நிலையில் இப்படி ஒரு சோகம் ஏற்பட்டுவிட்டது"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு