Published:Updated:

பசுமைத் தொழிற்சாலைகளாக மாறும் தேயிலைத் தொழிற்சாலைகள்... நீலகிரியில் புதுமை!

Tea factory
Tea factory

சூழலியல் பாதுகாப்பின் முன் மாதிரியாக நீலகிரியில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளை பசுமைத் தொழிற்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டின் மிகப்பெரிய தேயிலைத் தொழில் கூட்டுறவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது இன்ட்கோசர்வ் (INDCOSERVE) அமைப்பு நீலகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

Tea factory
Tea factory

ஆங்கிலேயர்கள் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பயிர்களில் ஒன்று தேயிலை. 'காடுகளையும் மரங்களையும் அழித்தே தேயிலை பயிர் செய்யப்பட்டது. மேலும்,‌ தேயிலை தூள் உற்பத்தி செய்யவும் அதிகளவு மரங்கள் விறகாக எரிக்கப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியின் பாரம்பர்ய மரங்களும், புற்கள் இனங்களும் அழிந்து வருவதாக சூழலில் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இதைத் தனியார் பெருந்தேயிலைத் தோட்டங்கள் ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றன. ஆனால், அரசு தேயிலைத் தோட்டங்கள் வனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 'இன்ட்கோசர்வ்' கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதன் வளாகத்தைச் சூழலியலோடு ஒத்த தன்மையுடன் மாற்றும் முன்மாதிரி பணியில் களமிறங்கி இருக்கிறார்கள்.

Tea factory
Tea factory

இந்தப் புது முயற்சி குறித்து பேசிய இன்ட்கோசர்வ் தலைமை நிர்வாக அதிகாரியும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹு, "தேயிலைத் தூள்‌ தயாரிக்க அதிகளவு மரங்களை எரிக்க வேண்டி இருப்பது உண்மைதான். இதிலிருந்து வெளியேறும் புகையும் சாம்பலும் அருகில் உள்ள நீரோடைகளையும்‌ பாதிக்கிறது. இதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் முயற்சியாகத் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கட்டபெட்டு மற்றும் மாகாலிங்கா ஆகிய இரண்டு தொழிற்சாலை வளாகத்தில் ஆக்கிரமித்துள்ள களைத்தாவரங்களை அகற்றிவிட்டு, நீலகிரி மலைப்பகுதியின் பூர்வீக மரங்களை மரங்களை நடவு செய்கிறோம்.

Tea factory
Tea factory

இதோடு நீலகிரியின்‌ பூர்வீக புல் வகைகளையும் நட்டுள்ளோம். இந்தப் பகுதியில் காணப்படும் பறவைகளை ஓவியமாக வரைந்துள்ளோம். இதை காண்பதற்கு தொழிற்சாலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறோம். இதன் மூலமாக சூழலியல் சார்ந்த நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் இந்தச் செயல், சூழலில் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு