Published:Updated:

`நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய' நவம்பர் 9-14 பெருமழை எச்சரிக்கை..! உண்மை என்ன?

மழை

மகாஜனங்களே... இப்போதைக்கு 'நவம்பர் 11 முதல் 14-ம் தேதிக்குள்ளாக சென்னையே காணாமல் போய்விடும்' என்கிற ரேஞ்சுக்கு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

`நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய' நவம்பர் 9-14 பெருமழை எச்சரிக்கை..! உண்மை என்ன?

மகாஜனங்களே... இப்போதைக்கு 'நவம்பர் 11 முதல் 14-ம் தேதிக்குள்ளாக சென்னையே காணாமல் போய்விடும்' என்கிற ரேஞ்சுக்கு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Published:Updated:
மழை

இப்போதெல்லாம், 'மழை வரும்' என்று வானிலை ஆய்வுமையம் சொல்வதற்கு முன்பாகவே பலரும் முந்திக்கொண்டு, பதிவுகளைப் போடுவதும் பரபரப்பைக் கிளப்புவதும் அதிகரித்தபடி இருக்கிறது. அதிலும் இந்த யூடியூப் தளங்களில் 'ஸ்கூல் பாய்ஸ்... இன்னிக்கு உங்களுக்குப் பள்ளிக்கூடம் நடக்காது?', 'காலேஜ் கேர்ள்ஸ், உங்களுக்கு லீவு வேணுமா?' என்கிற ரேஞ்சுக்கு மழைபற்றிய அறிவிப்புகளை பொழிந்து தள்ளிக்கொண்டுள்ளனர். ஆளாளுக்கு அனைத்தையும் ஃபார்வர்ட் செய்து, ‘நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய' என்கிற ரேஞ்சுக்கு பரப்பிக் கொண்டுள்ளனர்.

சென்னை மழை
சென்னை மழை

அவர்களையெல்லாம் கட்டுப்படுத்துவது அத்தனை சுலபமல்ல... ஆனால், என்ன உண்மை என்பதைத் தெரிந்துகொள்வது மிகமிகச் சுலபம். அதன்பிறகு உண்மையைப் பரப்புவதும் சுலபம். இதற்கு, ஐ.எம்.டி எனப்படும் இந்திய அரசின் வானிலை ஆய்வு மைய இணையதளத்தை mausam.imd.gov.in/chennai நாடலாம்.

மகாஜனங்களே... இப்போதைக்கு 'நவம்பர் 11 முதல் 14-ம் தேதிக்குள்ளாக சென்னையே காணாமல் போய்விடும்' என்கிற ரேஞ்சுக்கு பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மழை
சென்னை மழை

நவம்பர் 9-ம் தேதி மதியம் 1 மணி நிலவரப்படி, ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதை அப்படியே உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, `மழை பெய்யக்கூடும்' என்றுதான் கூறுவது வழக்கம். `பெய்யும்' என்று ஒருபோதும் அடித்துச் சொல்லமாட்டார்கள். காரணம், இயற்கையின் சூழல் அப்படி. கடைசி நிமிடத்தில் கூட பல்வேறு காரணிகளால் அது மாறக்கூடும். அதனால்தான், ஒருகுறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய முன்னெச்சரிக்கையை தருகிறது வானிலை ஆய்வு மையம். இங்கே ஐந்துநாள்களுக்கான காலவரையறையுடன் கூடிய வானிலை முன்னறிவிப்பை காணலாம்.

முதல் நாள் (நவம்பர் 9-ம் தேதி)

மஞ்சள் எச்சரிக்கை- கனமழை

(9-ம் தேதி மதியம் 1 மணியிலிருந்து, 10-ம்  தேதி காலை 8.30 மணி வரை பொருந்தும்)

தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் தொடர் மழை
சென்னையில் தொடர் மழை

இரண்டாவது நாள் (நவம்பர் 10-ம் தேதி)

மஞ்சள் எச்சரிக்கை - கனமழை

(10-ம் தேதி காலை 8.30 மணி முதல் 11-ம் தேதி காலை 8.30 மணி வரை பொருந்தும்)

தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரளவுக்குப் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மூன்றாவது நாள் (நவம்பர் 11-ம் தேதி)

ஆரஞ்சு எச்சரிக்கை - மிகக் கனமழை

(நவம்பர் 11-ம் தேதி காலை 8.30 மணி முதல் 12-ம் தேதி காலை 8.30 மணி வரை பொருந்தும்)

தமிழகத்தின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், தேனி மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும்.

நான்காவது நாள் (நவம்பர் 12-ம் தேதி)

ஆரஞ்சு எச்சரிக்கை - அதி கனமழை

(நவம்பர் 12-ம் தேதி காலை 8.30 மணி முதல் 13-ம் தேதி காலை 8.30 மணி வரை பொருந்தும்)

தமிழகத்தின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மழை
சென்னை மழை

ஐந்தாவது நாள் (நவம்பர் 13-ம் தேதி)

மஞ்சள் எச்சரிக்கை

(நவம்பர் 13-ம் தேதி காலை 8.30 மணி முதல் 14-ம் தேதி காலை 8.30 மணி வரை பொருந்தும்)

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மக்களே... உண்மையையே பரப்புங்கள்!

  • மஞ்சள் எச்சரிக்கை - கனமழை : 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை

  • ஆரஞ்சு எச்சரிக்கை - மிகக் கனமழை: 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை

  • சிவப்ப எச்சரிக்கை - அதி கனமழை: 21 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல்.

-பூநி