Published:Updated:

"ஒரு ட்வீட்டுக்கு ஒரு மரம்"- சொன்னதைச் செய்யும் ஒன்ப்ளஸ்!

#OxygenOs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவாகும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் ஒரு மரம் நடுவதாக அறிவித்திருந்தது, ஒன்ப்ளஸ்!

 #OxygenOS
#OxygenOS

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள் OxygenOS என்ற இயங்குதளத்தில் இயங்கிவருகின்றன. ஆண்ட்ராய்டின் மேல் கட்டமைக்கப்பட்ட இந்த இயங்குதளம், செப்டம்பர் 3, 2016 முதல் ஒன்ப்ளஸ் மொபைல்களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதில், ஆண்ட்ராய்டில் இல்லாத பல புதிய அம்சங்கள் இருந்தன. இந்த செப்டம்பர் மாதத்துடன் இந்த இயங்குதளம் அறிமுகமாகி 1500 நாள்களுக்கு மேல் ஆகிறது. இதையொட்டி WWF (இயற்கைக்கான உலகளாவிய நிதியம்) என்ற நிதியத்துடன் சேர்ந்து 27,333 மரங்களை நடப்போகிறது.

இந்நிலையில், #OxygenOs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவாகும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் ஒரு மரம் நடுவதாக அறிவித்தது ஒன்ப்ளஸ். இதற்கான கணக்கெடுப்பு, செப்டம்பர் 14 -ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 27,533 ட்வீட்டுகள் #OxygenOs என்ற ஹேஷ்டேக்குடன் பதிவாகியிருந்தன. இதற்கு 27,533 மரங்களை இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துடன் சேர்ந்து நடுவதாக ஒன்ப்ளஸ் துணைத் தலைவரான கார்ல் பெ கூறியுள்ளார்.

ஒன்ப்ளஸ் மென்பொருள் வளர்ச்சியின் தலைவரான சைமன் கொபக், தன்னுடைய ஆதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் எங்கள் இயங்குதளத்திற்கு OxygenOs எனப் பெயர் வைத்ததற்குக் காரணம் உண்டு. அது, தூய்மையான காற்றை குறிப்பது மட்டுமில்லாமல், அது இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதைப் போலவே OxygenOs ஸ்மார்ட்போன்களுக்கு சக்தி அளித்து தூய்மைப்படுத்துகிறது. இதைக் குறிப்பிடுவதற்காகவே இந்த மரம் நடும் பணியை மேற்கொண்டோம்."

ஆப்பிள் முதல் ஒன்ப்ளஸ் வரை...மொபைல்கள் படையெடுக்கும் டெக்(செப்)டம்பர்!

ஏற்கெனவே, உலகம் எங்கும் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவருகின்றன. "ஒரு நிமிடத்திற்கு 27 கால்பந்து மைதானங்களுக்கு நிகரான காடுகள் உலகத்தில் அழிக்கப்படுகின்றன" என்கிறது WWF. இந்நிலையில், ஒன்ப்ளஸின் இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.