Published:Updated:

`காடுகளைப் பாதுகாக்க பழங்குடிகளால்தான் முடியும்' - வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்

``தமிழ்நாடு முழுக்க 22.7 சதவிகிதம் காடுகளின் பரப்பளவு உள்ளது. இதை 33 சதவிகிதமாக உயர்த்த செயல்பட வேண்டும், இனி வரும் காலங்களில் பத்தாயிரம் குறுங்காடுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்'' அமைச்சர் மெய்யநாதன்.

`காடுகளைப் பாதுகாக்க பழங்குடிகளால்தான் முடியும்' - வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

``தமிழ்நாடு முழுக்க 22.7 சதவிகிதம் காடுகளின் பரப்பளவு உள்ளது. இதை 33 சதவிகிதமாக உயர்த்த செயல்பட வேண்டும், இனி வரும் காலங்களில் பத்தாயிரம் குறுங்காடுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்'' அமைச்சர் மெய்யநாதன்.

Published:Updated:
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், மலை மற்றும் கடலோரப் பகுதிகளில் நிலையான வளர்ச்சி குறித்த திட்ட மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் கலந்துகொண்டார். ஆராய்ச்சி மையத்தின் ஆண்டு அறிக்கையை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆன்லைன் மூலம் எம்.எஸ்.சுவாமிநாதன்
ஆன்லைன் மூலம் எம்.எஸ்.சுவாமிநாதன்

மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹரிகரன், வேர்ல்டு பிஷ் இண்டெரிம் இயக்குநர் எசாம் யாசின் முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள இயலாததால் இணையம் வழியாக உரையாற்றினார். அவர் பேசுகையில், ``நம்முடைய பாரம்பர்ய சொத்தான மரங்களையும் இயற்கை வளங்களையும், எதிர்காலத்துக்காக பாதுகாக்க வேண்டும். ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான மாநாட்டுக்குப் பிறகும் பெய்ஜிங்கில் நடந்த பெண்களுக்கான மாநாட்டுக்குப் பிறகும் அழிந்து கொண்டிருக்கும் மரங்களைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் எதிர்கால உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் என்பதையும் உணர்ந்துள்ளனர். பெரும்பாலும் காடுகளில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தை பழங்குடி மக்களே உணர்கின்றனர். அவர்களுக்குத்தான் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான உறவுமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழங்குடி மக்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்வில் நான் குறிப்பிட நினைப்பது என்னவென்றால் 97 சதவிகித தண்ணீரை கடற்பகுதியில் இருந்துதான் நாம் பெறுகிறோம். எனவே, அதை முறையாக சேமிக்கவும் பயன்படுத்தவும் வேண்டும்" என்றார்.

மெய்யநாதன்
மெய்யநாதன்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் சிவ மெய்யநாதன் பேசுகையில்,

``கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு நான் கலந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்துக்குள் நுழையும்போதே என்னை மூங்கில் மரங்கள் வரவேற்றது மூங்கில் மரங்கள் நமக்கு அதிக அளவான ஆக்சிஜனை தரக்கூடியது. கொரோனா இரண்டாவது அலையின் போது செயற்கை ஆக்சிஜனுக்காக நாடே தத்தளித்தது நமக்கு நினைவிருக்கும். அதனால் மரங்களை, குறிப்பாக மூங்கில் மரங்களை அனைவரும் தங்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான தனித்துறை என்பது கிடையாது. ஆனால், முதல்வர் இந்தத் துறையை ஆரம்பித்து என் கையில் ஒப்படைத்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க என்னால் முடிந்த முயற்சிகளை செய்வேன். தமிழ்நாடு முழுக்க 22.7 சதவிகிதம் காடுகளின் பரப்பளவு உள்ளது. இதை 33 சதவிகிதமாக உயர்த்த செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இனி வரும் காலங்களில் பத்தாயிரம் குறுங்காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். என் துறையில் கிட்டத்தட்ட 52,000 தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்சாலைகள் இயற்கையை மாசுபடுத்துவதற்கு ஈடாக மரங்களை நட வேண்டும். தொழிற்சாலைகளில் இடமில்லை என்றால் அரசு அலுவலகங்களிலும் பட்டா நிலங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். இதன் மூலம் பத்தாயிரம் குறுங்காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.