Published:Updated:

150 ரகங்கள், 2.20 லட்சம் மலர் நாற்றுகள்; செப்டம்பர் சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா!

மலர் நாற்றுகள் நடவு பணி
மலர் நாற்றுகள் நடவு பணி

ஊட்டியில் உள்ள இரண்டாம் சீசனுக்காக 150 ரகங்களில் 2.20 லட்சம் மலர் நாற்றுகள் மற்றும் மலர் அலங்காரத்திற்கு 7,000 தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை நேற்று தொடங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உள்பட அனைத்து பூங்காக்களிலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

மலர் நாற்றுகள் நடவு பணி
மலர் நாற்றுகள் நடவு பணி
75 ரகங்கள், 1,70,000 மலர் நாற்றுகள்; கொட்டும் மழையிலும் நடவுசெய்யும் பூங்கா பணியாளர்கள்!

நீலகிரியில் இரண்டாவது ஆண்டாக கோடை விழா ரத்து செய்யப்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் நடைபெறும் என்ற நம்பிக்கையில் பூங்காக்களை தயார் படுத்தும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது சீசனுக்காக பாத்திகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் இன்று தொடங்கியுள்ளனர். தோட்டக்கலைத் துணை இயக்குநர், பூங்கா உதவி இயக்குநர் ஆகியோர் இதனைத் துவக்கி வைத்தனர்.

இரண்டாம் கட்ட சீசன் ஏற்பாடுகள் குறித்து அரசு தாவரவியல் பூங்கா அதிகாரிகள், `` டேலியா, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஜினியா, கேலண்டூலா, லூபின், சப்னேரியா, பிகோனியா, ஆஸ்டர், வெர்பினா உள்ளிட்ட 150 ரகங்களில் 2.20 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இதுதவிர மலர் அலங்காரத்திற்காக 7,000 தொட்டிகளிலும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மலர் நாற்றுகள் நடவு பணி
மலர் நாற்றுகள் நடவு பணி
1,325 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம்; விவசாயிகளை அழைக்கும் தோட்டக்கலைத்துறை!

பூங்கா நுழைவு வாயில் பகுதி, இத்தாலியன் கார்டன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வகை பகுதியில் மலர்ச் செடிகள் நடவு செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நல்ல மழை பெய்து வருவதால் செப்டம்பர் மாதத் துவக்கத்தில் மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும்" என தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு