Published:Updated:

ஊட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய `வெள்ளி நீரோடை'... கோடப்பமந்து ஓடையின் இன்றைய பரிதாப நிலை!

தொட்டபெட்டா சரிவு பகுதியில் ஓடையாக உருவாகி வரும் நீர்
தொட்டபெட்டா சரிவு பகுதியில் ஓடையாக உருவாகி வரும் நீர்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழைநீர், இயற்கையாகவே புல்வெளிகளின் வேர்ப்பகுதிகளில் சேமிக்கப்படுகின்றன. இப்படி சேமிக்கப்பட்ட நீர்தான் கசிந்து சிற்றோடைகளாக இணைந்து நதியாக மாறுகின்றன. அதுபோன்ற நீரோடைகளில் ஒன்றுதான் ஊட்டி நகரின் அடையாளமான கோடப்பமந்து நீரோடை.

கோடப்பமந்து நீரோடை
கோடப்பமந்து நீரோடை

தொட்டபெட்டா சரிவு பகுதியில் ஓடையாக உருவாகி வரும் நீர், ஊட்டி நகரின் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.

கோடப்பமந்து நீரோடை
கோடப்பமந்து நீரோடை

குடிநீருக்காக தொட்டி மூலம் சேமிக்கப்படும் தண்ணீர் போக, கசியும் நீர் கோடப்பமந்து ஓடையில் வழிந்தோடும். ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத ஓடை புதர்மண்டி காணப்படுகிறது.

உதகமண்டலம்
உதகமண்டலம்

ஊட்டி நகர் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே ஓடை ஆக்கிரமிப்புகளால் கோடப்பமந்து ஓடையின் அகலம் வெகுவாக குறைந்துவிடுகிறது.

உதகமண்டலம்
உதகமண்டலம்

ஓடை ஆக்கிரமிப்புகளை தாண்டி அத்துமீறி கட்டப்படும் கட்டடங்களால் கோடப்பமந்து ஓடை நகர் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே கால்வாய் அளவுக்கு சுருங்கிவிடுகிறது.

உதகமண்டலம்
உதகமண்டலம்

ஓடை ஆக்கிரமிப்புகளை தாண்டி அத்துமீறி கட்டப்படும் கட்டடங்களால் கோடப்பமந்து ஓடை நகர் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே கால்வாய் அளவுக்கு சுருங்கிவிடுகிறது

ஊட்டி
ஊட்டி

ஊட்டி நகர் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் பாதிக்கப்படுகிறது கோடப்பமந்து ஓடை.

கோடப்பமந்து ஓடை
கோடப்பமந்து ஓடை

பல அரிய வகை மீன் இனங்கள், தவளைகள், நண்டுகள், பூச்சி இனங்கள், தாவரங்கள் எனப் பல்லுயிர்களின் சொர்க்கமாக இருந்த கோடப்பமந்து ஓடை, தற்போது ஊட்டி நகரத்துக்குள் 2 கி.மீ கடப்பதற்குள் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், இறைச்சிக்கடை கழிவுகள் என அனைத்தையும் சுமந்து செல்கிறது.

கோடப்பமந்து ஓடை
கோடப்பமந்து ஓடை

நீலகிரியின் முதல் ஆட்சித்தலைவரான ஜான் சல்லீவனுக்கு மிகவும் பிடித்த ஓடை இது. அந்தக் காலகட்டத்திலேயே இந்த ஓடையில் கழிவுகள் கலக்கப்பட்டதால் மாசடைய ஆரம்பித்துள்ளது. அப்போது சுதாரித்துக்கொண்ட ஜான் சல்லீவன், 1845-ம் ஆண்டில் ‘கோடப்பமந்து கால்வாய் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி ஓடையைப் பாதுகாக்க முயற்சி எடுத்திருக்கிறார். அந்த முயற்சி தொடருமா?

கோடப்பமந்து ஓடை
கோடப்பமந்து ஓடை

கோடப்பமந்து ஓடை நீர் ஊட்டி படகு இல்லம் அருகே சுத்திகரிக்கப்படுகிறது.

படகு இல்ல ஏரி
படகு இல்ல ஏரி

சுத்திகரிக்கப்படும் நீர் படகு இல்ல ஏரியில் கலக்கிறது.

படகு இல்ல ஏரி
படகு இல்ல ஏரி

ஊட்டி படகு இல்ல ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஓடை வழியாக மாயார் ஆற்றில் கலந்து கடைசியாக காவிரியில் கலக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு