Published:Updated:

நீலகிரி: யானை விரட்டவந்த இடத்தில் கும்கிக்கு மதம்... போராடி முகாமுக்கு கொண்டு சென்ற வனத்துறை!

ஊருக்குள் வரும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டவந்த வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் பல மணி நேரம் போராடி வண்டியில் ஏற்றி முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

நீலகிரி: யானை விரட்டவந்த இடத்தில் கும்கிக்கு மதம்... போராடி முகாமுக்கு கொண்டு சென்ற வனத்துறை!

ஊருக்குள் வரும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டவந்த வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் பல மணி நேரம் போராடி வண்டியில் ஏற்றி முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

Published:Updated:

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் வருகின்றன. இது போன்ற சமயங்களில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. கும்கி யானைகளைக் கொண்டே காட்டுயானைகளை ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர்.

kumki
kumki

இந்நிலையில், தேவாலா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை அடர் வனத்துக்குள் விரட்ட முதுமலையிலிருந்து உதயன், ஜான், வில்சன் ஆகிய 3 கும்கி யானைகளை அழைத்து வந்தனர். குடியிருப்புப் பகுதிளுக்கு வரும் காட்டுயானைகளைக் கும்கிகளின் உதவியோடு விரட்டி வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வில்சன் என்ற கும்கி யானைக்குத் திடீரென மதம் பிடித்தது. இதனால் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதுடன், பாகன்களின் சொல்லுக்குக் கட்டுப்படாமல் பாகன்களைத் தாக்க முயன்றது. பின்னர், இரும்பு சங்கிலியைக் கொண்டு மரத்தில் கும்கி யானையைக் கட்டிவைத்தனர்.

kumki
kumki

இருந்தும் மிகுந்த ஆக்ரோஷமாகவே இருந்தது. முகாமுக்கு கொண்டு செல்வதே சிறந்தது என முடிவு செய்து லாரியில் ஏற்ற முயற்சி செய்தனர். லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்தது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து கரும்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து பல மணி நேரம் போராடி ஒரு வழியாக லாரியில் ஏற்றி முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ``முதுமலை கேம்ப்ல இருக்குற கும்கிங்க எல்லாமே மஸ்த்துல இருக்கு. வில்சன் மாதிரி ஒண்ணு ரெண்டு கும்கிகளுக்கு மஸ்த் இல்லன்னு ஆபரேஷனுக்கு கூட்டிட்டுப் போனோம். இப்ப இதுக்கும் மஸ்த்தாயிடுச்சு. இங்க வச்சிருந்தா ரொம்ப முரண்டு பிடிக்கும். அதான் ரொம்ப ட்ரை பண்ணி கேம்புக்குக் கொண்டு வந்துட்டோம். இன்னொரு கும்கிக்கும் மதம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதையும் முகாமுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்றோம்" என்றார்.

kumki
kumki

`ஊருக்குள் வரும் காட்டு யானைகளைக் கண்காணிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்' எனக் கூடலூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.